என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "candidate Jagathrakshakan"

    • திமுக கூட்டத்தில் எம்.பி. ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
    • கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தபோது நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

    திருவள்ளூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் எம்.பி. ஜெகத்ரட்சகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

    அப்போது கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தபோது நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

    கூட்டத்தில் பேசிய எம்.பி. ஜெகத்ரட்சகன், "கலைஞர் உடல்நிலை சரியில்லாதபோது அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி அவரது வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது இவ்வளவு செல்வாக்கு படைத்த நீங்கள் இப்படி சிறிய வீட்டில் இருக்கிறீர்களே. டெல்லியில் எனக்கு பெரிய வீடு இருக்கிறது. என் வீட்டுக்கு வாங்க என பிரதமர் மோடி அன்று கலைஞரை அழைத்தார். ஆனால் "எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்காங்க.. அதனால் உங்கள் வீடு பத்தாது என கலைஞர் சிரித்துக்கொண்டே கூறிவிட்டார்" என்று தெரிவித்தார். 

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LSpolls #Jagathrakshakan
    ஆற்காடு:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன.

    பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்தது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் 
    பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.



    இந்நிலையில், நேற்று ஆற்காடு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தாழனூர், கத்தியவாடி, கவரப்பாளையம், ராமாபுரம், ஆயிலம்புதூர், ஆயிலம், கீழ்குப்பம், அருங்குன்றம், சாம்பசிவபுரம், கூரம்பாடி, உப்புப்பேட்டை ஆகிய கிராமங்களில் திற்ந்த வேனில் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.



    அப்போது கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராணிப்பேட்டை ஆர்.காந்தி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நிசாத் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். #LSpolls #Jagathrakshakan 
    ×