என் மலர்
நீங்கள் தேடியது "Rights"
- இந்திய சமூகத்தில் சாதி தொடர்ந்து வலுவான சமூக செல்வாக்கை செலுத்தி வருகிறது.
- சாதி மறுப்புத் திருமணங்கள் சாதிய ரீதியிலான பாகுபாட்டை பலவீனப்படுத்துகிறது.
வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது அரசமைப்புச் சட்டப்படி தனிநபர் உரிமை என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
11 வருடங்களாக காதலித்து வந்த வெவ்வேறு சாதியை சேர்ந்த இருவர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், "வெவ்வேறு சாதியை சேர்ந்த நாங்கள் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆனால் இதற்கு எங்களது குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அவர்களிடம் இருந்து அச்சுறுத்தல்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஆகவே டெல்லி போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரும் போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் பேசிய நீதிபதி சஞ்சீவ் நருலா, "இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21 இன் படி வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது தனிநபர் உரிமையாகும். திருமண வயது வந்தவர்களின் தேர்வை அவர்களின் குடும்பமோ, சமூகமோ தடுக்க முடியாது. இந்திய சமூகத்தில் சாதி தொடர்ந்து வலுவான சமூக செல்வாக்கை செலுத்தி வருகிறது. சாதி மறுப்புத் திருமணங்கள் சாதிய ரீதியிலான பாகுபாட்டை பலவீனப்படுத்துவதன் வழி சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.
- பெண்கள் தங்களது உரிமைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்று சிவகங்கை நீதிபதி பேசினார்.
- காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான அரசியல் அமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பரமேஸ்வரி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசிய தாவது:-
அரசியல் அமைப்பு சட்டத்தின் ஷரத்துக்களில் பெண்கள் பாதுகாப்புக்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
பெண்கள் அவற்றினை தெரிந்து கொண்டு சமுதாயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தங்க ளது உரிமைகளை தெரிந்து கொண்டு வாழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கல்லூரி முதல்வர் ஹேம மாலினி, துணை முதல்வர் விசாலாட்சி, கவிதா, உதவி பேராசிரியர் வீரமணி, வக்கீல் மணிமேகலை ஆகியோர் பேசினர். இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
- தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
- தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை நேரில் கேட்டறிந்தும் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கிடும் திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாட்கள் மற்றும் மேல் விவரங்கள் ஏதேனும் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்திடும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை எண்.120 தொலைபேசி எண். 0427-2452202, வாட்ஸ் அப் எண் 88254 73639 ஆகும்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகங்களை பொறுத்தவரை சேலம் - 0427-2452121, சேலம் மேற்கு- 0427-2335611, சேலம் தெற்கு -0427-2271600, ஏற்காடு- 04281-222267, வாழப்பாடி- 04292-223000, பெத்தநாயக்கன் பாளையம் - 04282-221704, ஆத்தூர் - 04282-240704, தலைவாசல் -04282-290907, கெங்கவல்லி - 04282-232300, ஓமலூர் - 04290-220224, காடையாம்பட்டி - 04290-243569, மேட்டூர் - 04298-244050, எடப்பாடி- 04283-222227 மற்றும் சங்ககிரி - 04283-240545 ஆகிய வட்டாட்சியர் அலுவ லகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருகிறது.
மேலும், தங்கள் பகுதியில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் அப்பகுதியை சார்ந்த பொது மக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை நேரில் கேட்டறிந்தும் தெளிவு படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- கீழ் பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு ஜூன் 10-ந் தேதி சிவகிரியில் நடைபெறுகிறது.
- விவசாயிகளிடம் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார வேன் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.
சிவகிரி:
கீழ் பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு ஜூன் 10-ந் தேதி சிவகிரியில் நடைபெறுகிறது.
மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளிடம் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார வேன் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசனக்கா–ரர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி செயலாளர் பொன்னையன் வழக்க–றிஞர் பிரிவு தலைவர் சுப்பு, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு துணைத்த–லைவர் ஆறுமுகம் எல்.5, பாசன சபை தலைவர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






