கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை மாநாடு

கீழ் பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு ஜூன் 10-ந் தேதி சிவகிரியில் நடைபெறுகிறது. விவசாயிகளிடம் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார வேன் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.
கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை மாநாடு
Published on

சிவகிரி:

கீழ் பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு ஜூன் 10-ந் தேதி சிவகிரியில் நடைபெறுகிறது.

மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளிடம் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரச்சார வேன் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசனக்கா–ரர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி செயலாளர் பொன்னையன் வழக்க–றிஞர் பிரிவு தலைவர் சுப்பு, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு துணைத்த–லைவர் ஆறுமுகம் எல்.5, பாசன சபை தலைவர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com