search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thackeray"

    நவாசுதீன் சித்திக் நடிப்பில் தாக்கரே படம் ரிலீசாகியிருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், ரஜினி, கமலை ஒப்பிட வேண்டாம் என்றும், மீண்டும் கமலுடன் நடிக்க விரும்புவதாகவும் கூறினார். #NawazuddinSiddiqui
    பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக், தாக்கரே படத்தில் பால் தாக்கரேவாக நடித்து அசத்தி உள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    நேர்மையாக நடிக்கவேண்டும். உண்மையாக நடிக்கவேண்டும். யாரையும் காப்பி அடித்து நடிக்கக் கூடாது. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போது தாக்கரே படத்தில் நடித்தேன். இதற்காக நிறையவே ஹோம் ஒர்க் செய்தேன். பால்தாக்கரே எப்படி நடப்பார், பார்ப்பார், எப்படிப் பேசுவார் என்பதை எல்லாம் உள்வாங்கி கொள்ளவேண்டும். உடன் நடித்த நடிகர்களில் தமிழில் விஜய் சேதுபதியையும், ரஜினியையும் ரொம்பவே பிடித்தது. ரஜினிகாந்த், எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார். ஆனால் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதைச் செய்ய ஆசைப்படுகிறார். அதையே செய்கிறார்.



    இது பெரிய வி‌ஷயம். கமல் நடிப்பு, ரஜினி நடிப்பு என்று ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதேசமயம் கமல் மிகச்சிறந்த நடிகர். கமலின் ஹேராம் படத்தில், ஒரு காட்சியில் நடித்தேன். ஆனால் அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை. ஆளவந்தான் இந்தியில் டப் செய்யப்பட்டது. அந்தப் படத்தில் கமலுக்கு இந்தி பயிற்சியாளராக பணிபுரிந்தேன். அவருடன் நடிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்’. இவ்வாறு நவாசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார். #NawazuddinSiddiqui #Thackeray #Rajinikanth #KamalHaasan

    சிவசேனா தலைவர் மறைந்த பால் தாக்கரேவின் பிறந்தநாளையொட்டி 33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் உருவாக்கப்பட்ட அவரது முகம் பலரையும் கவர்ந்துள்ளது. #Balasaheb #BalThackeray #ShivSena
    மும்பை:

    சிவசேனாவின் நிறுவனத் தலைவரான பால் தாக்கரே 23-1-1926 அன்று பிறந்து கடந்த 17-11-2012 அன்று காலமானார். இன்று அவரது பிறந்தநாளை அக்கட்சியினர் மிக எழுச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

    மும்பையில் உள்ள மேயர் ஹவுஸ் இல்லத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பால் தாக்கரேவின் மகனான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிர அரசை நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தார்.

    அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்  மேயர் ஹவுஸ் இல்லத்தின் சொத்து பத்திரங்களை மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று உத்தவ் தாக்கரேவிடம் ஒப்படைத்தார்.



    இதற்கிடையில், மும்பையில் உள்ள சிவசேனா கட்சி தலைமையகத்தில் பிரபல ஓவியர் ஒருவர் சுமார் 33 ஆயிரம் ருத்ராட்சம் கொட்டைகளால் உருவாக்கப்பட்ட அவரது முகம் பலரையும் கவர்ந்துள்ளது. #Balasaheb #BalThackeray #ShivSena 
    ×