என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டுத்தீ"

    • வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.
    • சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன.

    மாட்ரிட்:

    காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வறட்சியான காலநிலை காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது.

    அதன்படி, ஸ்பெயினின் மேற்கு பிராந்தியமான கலீசியா, காஸ்டில் உள்ளிட்ட 14 இடங்களில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.

    கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பரவும் இந்த காட்டுத் தீயில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1½ லட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. எனவே ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த வாரம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி வத்திராயிருப்பில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியது. உடனே வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு காட்டுத்தீ பரவாமல் தடுத்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் சாப்டூர் வனச்சரகம் வருசநாடு வழியாக சதுரகிரிக்கு செல்லும் பாதையில் உள்ள கள்ளிச்சுனை என்ற இடத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக அந்தப்பகுதியில் உள்ள மரங்களுக்கு தீ பரவியது. இதனால் வன விலங்குகள் பாதிக்கப் பட்டன.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள வறண்ட சூழ்நிலை காரணமாக தீ வேகமாக பரவி கட்டுப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 2-வது நாளாக இன்றும் சதுரகிரி மலைப்பகுதியில் உள்ள மணிக்கட்டி என்ற இடத்தில் காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த தீயில் மூலிகை மற்றும் அரிய வகை மரங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன.

    தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருவதால் சதுரகிரி கோவிலுக்கு செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாகவும் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அடிவாரத்தில் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர்.

    • துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.
    • காட்டு தீயில் சிக்கி பல ஏக்கர் எரிந்து நாசமாகி உள்ளன.

    அங்காரா:

    துருக்கியின் எஸ்கிசெஹிர் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் காட்டு தீயில் சிக்கி இதுவரை பல ஏக்கர் எரிந்து நாசமாகி உள்ளன. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து அதனை அணைக்க முயன்று வருகின்றனர்.

    இதில் பல ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

    இந்நிலையில், பலத்த சூறாவளி காற்று வீசியதால் காட்டுத் தீயின் திசை மாறியது. தீயணைப்புப் பணியில் இருந்த மீட்புப்படையினர் அதில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 10 பேர் உடல் கருகி பலியாகினர்.

    படுகாயம் அடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காட்டுத் தீயில் சிக்கி கருகி பலியான தீயணைப்பு வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • நியூ ஜெர்சி மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருகிறது.
    • காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 13,000 ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளது.

    கடும் புகை மூட்டம் காரணமாக அவ்வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. அத்துடன் அப்பகுதியில் இருந்து 5,000-க்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் 25,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இதையடுத்து அங்கு மாநில அளவிலான அவசர நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுக்குள் வந்துள்ளது. இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. தீயை அணைக்கும் பணிகள் இரவு, பகலாக நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன.
    • இதில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.

    சியோல்:

    தென்கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேகக் காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இந்த காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 19 பேர் காயமடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    காட்டுத்தீ காரணமாக சுமார் 43,000 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.

    காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டத்தால் மீண்டும் காட்டுத்தீ பரவியது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 19 பேர் காயமுற்றதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

    தென் கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேக காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 19 பேர் காயமுற்றுள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காட்டுத்தீ காரணமாக அண்டாங் மற்றும் இதர தென்கிழக்கு நகரங்கள் மற்றும் டவுன்களில் வசிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். காட்டுத்தீ காரணமாக சுமார் 43 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவு கொண்ட நிலம் பாதிக்கப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் கோவிலும் அடங்கும்.

    அண்டாங் பகுதியில் வசிக்கும் 5500-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக தீயணைப்புத் துறையினர் காட்டுத்தீ பெரும்பாலும் அணைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். எனினும், வறண்ட வானிலை மற்றும் அதீத காற்றோட்டம் காரணமாக மீண்டும் காட்டுத்தீ பரவியுள்ளது.

    காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் கிட்டத்தட்ட 9 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 130 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    • மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர்.
    • காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    சியோல்:

    தென்கொரியாவின் கியோங்சாங் மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. பலத்த காற்றால் இந்த காட்டுத்தீ மளமளவென வேகமாக பரவி வருகிறது. இதில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகி உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

    இதற்கிடையே அங்கு மீட்பு பணியில் ஈடுபட்ட 2 தீயணைப்பு வீரர்கள் பலியாகி உள்ளனர். தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் தற்போது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. எனவே அங்கு அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனையடுத்து அந்த பகுதியில் வசிக்கும் 600 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    • சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.
    • சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது

    தென் கொரியாவின் தெற்குப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக குறைந்தது 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மற்றும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை சான்சியோங் கவுண்டியில் தொடங்கிய தீ, தற்போது மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. சனிக்கிழமை இரவு நிலவரப்படி, சான்சியோங் தீ 25% கட்டுப்படுத்தப்பட்டது. சுமார் 847 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது.

    சான்சியோங்கிலிருந்து 260க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் உல்சான் மற்றும் கியோங்சாங் மாகாணத்தில் காட்டுத் தீயில் இருந்து தப்பி சுமார் 620 பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

    தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். கொரியா வனத்துறை தீயை கட்டுப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது, மேலும் சான்சியோங்கை ஒரு சிறப்பு பேரிடர் பகுதியாக அரசு அறிவித்துள்ளது.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
    • காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

    காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மொத்தம் 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி உள்ளதாகவும், இதுவரை 65 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், நாடு முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • காட்டுத்தீ சிக்கி 500க்கும் மேர்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    • காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சான்டியாகோ:

    சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மொத்தம் 34 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் காட்டுத்தீ பரவி உள்ளதாகவும், இதுவரை 65 காட்டுத்தீ சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, நாடு முழுவதும் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சிலியில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. பயோபியா பகுதியில் 16 பேர், லா அருணாசியாவில் 5 பேர், நுபில் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும், 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆங்காங்கே சில இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது.
    • காட்டுத்தீ பற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது ஆங்காங்கே சில இடங்களில் காட்டு தீ ஏற்பட்டு வருகிறது. இதனை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று காலை கூடலூர் அருகே உள்ள வனத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த பகுதி முழுவதும் தீ வேகமாக பரவியது. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு தீயில் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் வனத்திற்குள் இருக்கும் சிறிய வகை உயிரினங்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது.

    காட்டுத்தீ பற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • சித்தரேவு- பெரும்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது.
    • தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலைக் கிராமங்களான தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள புல்வெளிகள் கருகி வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. கோடைக்காலம் தொடங்கி விட்டால் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக இருந்து வருகிறது.

    அதன்படி நேற்று முன்தினம் மாலை சித்தரேவு- பெரும்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலகுண்டு வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வனப்பகுதியில் இருந்த அரிய மூலிகைகள், மரங்கள் எரிந்து சேதமாகின.

    இந்தநிலையில் 2-வது நாளாக தாண்டிக்குடியில் உள்ள கரியமாள் கோவில், அழிஞ்சோடை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தாண்டிக்குடி, பெரும்பாறை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

    ×