குடியிருப்பு பகுதியில் புகுந்த ஐந்து அடி நீளபாம்பு

திருப்பத்தூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஐந்து அடி நீளபாம்பு பிடிபட்டது. அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
குடியிருப்பு பகுதியில் புகுந்த ஐந்து அடி நீளபாம்பு
Published on

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வீட்டில் இருந்த சுமார் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை உயிருடன் மீட்டு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com