என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கட்டிட விபத்தில் பெண் பலி- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
- கட்டிடத்தை இடிக்க கடந்த 13-ந் தேதி மாநகராட்சி அனுமதி தந்துள்ளது.
- இறந்த பெண் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
சென்னை:
சென்னை அண்ணா சாலையில் கட்டிட இடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடைபாதையில் நடந்தால் உயிருக்கு பாதுகாப்பு இல்லையா? உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா பேசியதாவது:-
இந்த கட்டிடத்தை இடிக்க கடந்த 13-ந் தேதி மாநகராட்சி அனுமதி தந்துள்ளது. ஆனால் எந்த வகையிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வில்லை. ஆய்வு மேற்கொள்ளாததால் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
ஒரு இளம் பெண் உயிரிழந்துள்ளார். சாலை வரி செலுத்தும் மக்களுக்கு உரிய பாதுகாப்புடன் சாலைகள் அமைத்து தர வேண்டும். அது அரசாங்கத்தின் பொறுப்பு. இறந்த பெண் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






