பழைய கட்டிடத்தை இடித்தபோது விபத்து- சாலையில் சென்ற பெண் பலியான பரிதாபம்

சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்இந்த விபத்தால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பழைய கட்டிடத்தை இடித்தபோது விபத்து- சாலையில் சென்ற பெண் பலியான பரிதாபம்
Published on

சென்னை:

சென்னை அண்ணாசாலையில் பயன்படுத்தப்படாத பழைய கட்டிடத்தை ஜேசிபி எந்திரம் மூலம் இன்று இடிக்கும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அந்த பகுதியில் நடந்து சென்ற 2 பெண்கள் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மதுரையை சேர்ந்த பிரியா என்பவர் உயிழந்தார்.

இந்த விபத்தால் அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com