உ.பி.யில் சோகம் - கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி

காசியாபாத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
உ.பி.யில் சோகம் - கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி
Published on

லக்னோ:

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி நகரின் ரூப் நகர் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் ஒரு தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

கட்டிடம் இடிந்து விழுந்தபோது 10 முதல் 15 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர். இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் கூறினர்.

தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com