குஜராத்: சூரத்தில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு

ப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
குஜராத்: சூரத்தில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு
Published on

குஜராத் மாநிலம் சூரத் நகரத்தில் சச்சின் பாலி கிராமத்தில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த பயங்கர விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வேறுயாரும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டிடம் 5-6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கிறார். இந்த கட்டிடங்களில் 5 குடும்பங்கள் வசித்து வந்தனர்.

2017-18ல் கட்டப்பட்ட கட்டடம், வெறும் 6 ஆண்டுகளில் சிதிலமடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com