என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொலைக்காட்சி தொடர்"

    • அதிகாலையில் குடியிருப்பில் சார்ட் சர்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
    • சிறுவர்களின் விருப்பத்தின்படி, அவர்களது குடும்பத்தினர் இருவரின் கண்களையும் தானம் செய்தனர்.

    சோனி டிவியில் ஸ்ரீமத் ராமாயணம் இந்தி தொடரில் நடித்து புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் சர்மா (10 வயது) விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழில் சன் டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இவர் வீர ஹனுமான் தொடரில் லட்சுமணனாகவும் நடித்துள்ளார். சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் சிறுவயது சைஃப் அலிகானாகவும் நடித்திருந்தார்.

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் உள்ள வீட்டில் வீர் சர்மா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடியிருப்பில் சார்ட் சர்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

    விபத்து நடந்த நேரத்தில், தந்தையான ஜிதேந்திர சர்மா பஜனை நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார், தாயார் ரீட்டா சர்மா வேலை விஷயமாக மும்பையில் இருந்தார்.

    தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வீர் மற்றும் அவரது சகோதரர் சௌரியா, புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி சுயநினைவை இழந்தனர்.

    வீட்டின் அறையில் இருந்து புகை வந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சிறுவர்களின் விருப்பத்தின்படி, அவர்களது குடும்பத்தினர் இருவரின் கண்களையும் தானம் செய்தனர்.

    கோட்டா போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
    • சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.

    ஸ்டீபன் கிரஹாம், ஜாக் தோரேன் இணைந்து இயக்கிய 'Adolescence' என்ற நெட்பிலிப்ஸ் தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.

    இந்தத் தொடர், வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இதன் ஒவ்வொரு எபிசோடும் ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படமாக்கப்பட்டது.

    லண்டனில் நடக்கும் 'Adolescence' தொடர் கதைக்களத்தில் சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.

     இந்நிலையில் அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் விழாவில் அவர் விருது வென்றுள்ளார். எம்மி விருது வரலாற்றில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற இளைய நடிகர் என்ற சாதனையை ஓவன் கூப்பர் படைத்துள்ளார்.

    திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எம்மி விருதுகள் ஆகும்.

    இந்த வருட எம்மி விழாவில், 'Adolescence' தொடர் பல முக்கிய விருதுகளை வென்றது.

    சிறந்த தொடர், சிறந்த இயக்கம், சிறந்த எழுத்து, சிறந்த நடிகர் (ஸ்டீபன் கிரஹாம்) மற்றும் சிறந்த துணை நடிகை (எரின் டோஹெர்ட்டி) ஆகிய பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது. 

    • புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு, மக்களின் ஒவ்வொரு இயக்கமும் கண்காணிக்கப்படுகிறது.
    • குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான மக்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

    சர்வாதிகாரத்திற்கு பெயர் போன வட கொரியாவில் அன்றாட வாழக்கை மிகவும் கடுமையான விதிமுறைகளில் ஆனது. மக்கள் எப்படி முடி வெட்ட வேண்டும் என்பது முதல் தொலைக்காட்சியில் எதை பார்க்க வேண்டும் என்பது வரை அரசு தான் தீர்மானிக்கிறது.

    இதன் உச்சமாக தென் கோரியா உள்ளிட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ அல்லது பகிர்ந்தாலோ மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

    நேற்று ஜெனீவாவில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து 14 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    2014 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் வட கொரியாவிலிருந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பிச் சென்ற 300க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் நேர்காணல் செய்யப்பட்டு சேகரிக்கப்பட்ட விவரங்கள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு, மக்களின் ஒவ்வொரு இயக்கத்தையும் கண்காணிப்பதை தீவிரப்படுத்தியுள்ளதாவும், தண்டனைகள் மிகவும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

    அறிக்கைப்படி, 2015க்குப் பிறகு நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்க கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது.

    வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையர் ஜேம்ஸ் ஹீனன் கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், "கோவிட்-19 காலத்துக்கு பிறகு சாதாரண மற்றும் அரசியல் குற்றங்களுக்கான மரணதண்டனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

    தென் கொரியாவின் கே-டிராமாக்கள் உட்பட வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களை விநியோகிப்பதற்கான புதிய சட்டங்களின் கீழ், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான மக்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

    இருப்பினும், வட கொரிய அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்தது. அறிக்கையை அங்கீகரித்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தை எதிர்ப்பதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்மிருதியின் பேட்டிகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு
    • ஜுபின் இரானி எனும் தொழிலதிபரை ஸ்மிருதி திருமணம் செய்து கொண்டார்

    இந்திய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாகி பிறகு பா.ஜ.க.வில் இணைந்து மத்திய அமைச்சராக வளர்ந்தவர் ஸ்மிருதி இரானி (47).

    ஸ்மிருதி ஜுபின் இரானி எனும் தொழிலதிபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஜூபின் ஏற்கெனவே மோனா எனும் பெண்ணை திருமணம் செய்து பிறகு அவரை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஸ்மிருதி இரானி தொலைக்காட்சி பேட்டிகளிலும், கலந்துரையாடல்களிலும், விமர்சனங்களுக்கும் மற்றும் கேள்விகளுக்கும் காட்டமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிப்பதில் வல்லவர். இவர் பேட்டிகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

    2018ல் ஒரு தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சியில் பிரபல நடிகர் கமலஹாசனுடன் பங்கு பெற்று பலரும் பாராட்டும் வகையில் தனது கருத்துக்களை ஸ்மிருதி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் "என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்" எனும் ஒரு கேள்வி-பதில் பகுதியில் அவரிடம் பலர் சுவாரஸ்யமான கேள்விகளை கேட்டனர்.

    அப்போது ஒரு பயனர் ஸ்மிருதியிடம், "நீங்கள் உங்கள் பால்ய பருவ தோழியின் கணவரை திருமணம் செய்து கொண்டீர்கள் அல்லவா?" என கேட்டார்.

    இதற்கு காட்டமாக பதிலளித்து அவர் கூறியதாவது:

    "இது என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. முதலில் மோனா எனக்கு பால்ய பருவ தோழியாக முடியாது. ஏனென்றால் அவர் என்னை விட 13 வயது மூத்தவர். அது மட்டுமல்ல. அவர் அரசியல்வாதி அல்ல; ஒரு குடும்ப பெண்மணி. என்னோடு விவாதம் செய்து என்னை அவமானப்படுத்த நினைத்தால் அதற்கு அவரை இழுக்காதீர்கள். அவருக்கு உரிய மரியாதையை தந்தாக வேண்டும்."

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொலைக்காட்சி தொடரில் நடித்த காலங்களை இழந்ததாக நினைக்கிறீர்களா என கேட்கப்பட்டதற்கு "நான் கனவுலகில் வாழ்வதில்லை. தொலைக்காட்சி தொடரில் நடித்த காலங்கள் சிறப்பாக இருந்தது. வாழ்க்கையில் எதையும் நடக்காது என சொல்ல முடியாது என வாழ்க்கை நமக்கு கற்பிக்கிறது" என ஸ்மிருதி இரானி பதிலளித்தார்.

    ×