search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெட்பிளிக்ஸ்"

    • நெட்பிளிக்ஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் மிகப்பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது.
    • இந்நிறுவனம் கடந்த ஆண்டு ‘லியோ’ உள்ளிட்ட மிகப்பெரிய படங்களை வெளியிட்டது.

    சினிமா துறையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ள ஓடிடி தளம் நெட்பிளிக்ஸ். இந்நிறுவனம் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் மிகப்பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு 'லியோ' உள்ளிட்ட மிகப்பெரிய படங்களை வெளியிட்டது.


    இந்நிலையில், நெட்பிளிக்ஸ் இந்த ஆண்டு எந்தெந்த படங்களை வெளியிடவுள்ளது என்ற பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2'. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'தங்கலான்'. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் 'சொர்க்க வாசல்'.



    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்.கே.21'. இயக்குனர் கே. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'ரிவால்வர் ரீட்டா'. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து அரும் 'மகாராஜா'. இயக்குனர் கணேஷ் ராஜா இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'கண்ணிவெடி' போன்ற படங்களை வெளியிடவுள்ளது. இது தொடர்பான போஸ்டர்களையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.


     


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
    • படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

    இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. 'விடாமுயற்சி' திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.

    • நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது.
    • இந்தியாவிலும் அந்த நிறுவனம் பயனர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    பிரபல ஓ.டி.டி. நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்திய பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தடுக்க புதிய கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. அதில், இனி பயனர்களின் கணக்கை அவர்களும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். குடும்பத்திற்கு வெளியே யாரேனும் தங்கள் கணக்கை பயன்படுத்தினால் அவர்கள் தங்கள் புரொபைலை புதிய கணக்கிற்கு மாற்ற வேண்டும்.

    அதன் பின்னர் பாஸ்வேர்டை மாற்றுவது நல்லது என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, பாஸ்வேர்டு பகிர முடியாத தொழில்நுட்பத்தை ஏற்கனவே அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கடந்த மே மாதமே கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இந்தியாவிலும் அந்த நிறுவனம் பயனர்களுக்கு கட்டுப்பாடு விதித்திருப்பது பயனர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுதொடர்பான தங்கள் கருத்துக்களை நெட்பிளிக்ஸ் பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • மைக்கேல் லின் நெட்பிளிக்ஸில் பணிப்புரிவதற்கு முன் அமேசானில் பணிபுரிந்து வந்தார்.
    • சாஃப்ட்வேர் எஞ்சினியர் வேலை என்பது ஒரே மாதிரி வேலைகளை தொடர்ந்து செய்வதுதான் என மைக்கேல் லின் கூறினார்.

    வாஷிங்டன்:

    சீனாவைச் சேர்ந்த மைக்கேல் லின் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் நெட்பிளிக்ஸில் மூத்த சாஃப்ட்வேர் எஞ்சினியராக பணியாற்றி வந்தார். இவருக்கு இந்திய மதிப்பில் ரூ.3.50 கோடி ஆண்டு வருமானம். இவர் திடீரென தனது வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

    இதுகுறித்து அவர் தனது லிங்கடின் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

    நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் அந்த வேலையிலிருந்து விலகிவிட்டேன். இலவசமாக உணவு, அளவுக்கு அதிகமான ஊதியம், ஓய்வு நேரம், பெரிய நிறுவனம் என எனக்குக் கிடைத்தது. இருப்பினும் எனக்கு இந்த வேலை போர் அடித்ததால் விலகி விட்டேன்.

    நான் வேலையிலிருந்து விலகப்போகிறேன் என்றவுடன் என் பெற்றோர், எனது வழிகாட்ட ஆகியோர் எதிர்த்தனர். அடுத்த பணியை உறுதி செய்யாமல் வேலையிலிருந்து ராஜினாமா செய்யாதீர்கள். அடுத்த வேலைக்கான ஊதியத்தை உறுதி செய்தபின் செல்லுங்கள் என்றனர். ஆனாலும் எனக்கு பிடிக்காததால் வேலையை விட்டுவிட்டேன்

    ஆரம்ப காலகட்டத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். இருப்பினும் சாஃப்ட்வேர் எஞ்சினியர் வேலை என்பது ஒரே மாதிரி வேலைகளை தொடர்ந்து செய்வதுதான்.

    கொரோனாவுக்கு பின் ஊரடங்கில் உடன் பணிப்புரிபவர்களுடன் பழக வாய்ப்பில்லாமல் போனது. அதனால் வேலை அலுத்துவிட்டது"

    இவ்வாறு மைக்கேல் லின் தெரிவித்துள்ளார். மைக்கேல் லின் நெட்பிளிக்ஸில் பணிப்புரிவதற்கு முன் அமேசானில் பணிபுரிந்து வந்தார்.

    ×