என் மலர்
நீங்கள் தேடியது "Production Company"
- மிகப்பெரிய நாளுக்கான ஆயத்தம் என இந்த படங்கள் பகிரப்பட்டன.
- ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தரிசனம் செய்தனர்.
நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்.
அதற்கான பணிகளில் தற்போது ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிறுவனம் இன்று (ஆகஸ்ட் 26) தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த தொடக்க விழா பணிகளை ரவி மோகன் உடன் இருந்து மேற்பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
மிகப்பெரிய நாளுக்கான ஆயத்தம் என இந்த படங்களை ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த விழாவுக்கு நடிகர் கார்த்தியை நேரில் சென்று ரவி மோகன் அழைத்த வீடியோவும் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே ரவி மோகன் மற்றும் காதலி கெனிஷா இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தரிசனம் செய்தனர்.
இவர் ஈஞ்சம்பாக்கத்தில் முன்னாள் மனைவி ஆர்த்தியுடன் வாழந்த சொகுசு பங்களாவுக்கு கடந்த 10 மாதமாக EMI கட்டாமல் உள்ளார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- இதில் டி சீரிஸ், ஜீ ஸ்டுடியோஸ் போன்ற பிரபல நிறுவனங்களும் உள்ளன.
- விமர்சனங்களால் தனது விண்ணப்பத்தை ரிலையன்ஸ் திரும்பப்பெற்றது.
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் கடந்த புதன்கிழமை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானை தாக்கியது. மொத்தம் 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்ததாக ராணுவம் தெரிவித்தது.
இந்த தாக்குதலில் 30 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. பஹல்காமில் கணவனை இழந்து குங்குமத்தை இழந்ததால் பெண்களின் இழப்புக்கு பழிவாங்கும் விதமாக இந்த ஆபரேஷனுக்கு சிந்தூர் என பெயரிடப்பட்டது.
இந்நிலையில் இந்த நடவடிக்கையை மையப்படுத்தி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் படம் எடுக்க பாலிவுட் தயாரிப்பாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். எனவே ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கு காப்புரிமை வாங்க தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன.
ராணுவ பின்னணியில் படங்களைத் தயாரிக்கும் நார்த் மேக்கர்ஸ் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயருக்கு உரிமை கோரி உள்ளது.
இதில் டி சீரிஸ், ஜீ ஸ்டுடியோஸ் போன்ற பிரபல நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், 15 விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, இந்த பெயர் விரைவில் ஒருவருக்கு வழங்கப்படும்.
முன்னதாக இந்த பெயருக்கு அம்பானியின் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது.
ஆனால் ராணுவ நடவடிக்கையையும் தேசபக்தியையும் வணிகமயமாக்குவதாக சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை தெரிவித்த நிலையில் தனது விண்ணப்பத்தை ரிலையன்ஸ் திரும்பப்பெற்றது.
- இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
- அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'இந்தியன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வரும்போதிலும் அரங்கம் நிறைந்த காட்சிகளுடன் 3 நாட்களில் ரூ. 100 கோடி வசூலைத் தாண்டி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகரான விவேக் மற்றும் மனோபாலா நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. லைகா புரொடக்சன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. முன்னதாக 3 மணி நேரம் இருந்த நீளம் இப்பொழுது 11 நிமிடங்கள் 51 வினாடிகள் குறைக்கப்பட்ட புதிய பதிப்பு, இப்போது அனைத்து திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

தேவையற்ற சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழுந்தநிலையில், படத்தில் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்க்க படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






