பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.23 கோடி மோசடி- ஈ.வி.பி சந்தோஷ் ரெட்டி கைது

சந்தோஷ் ரெட்டி உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கூட்டாளிகளான வினோத் மற்றும் கிரண் ராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.23 கோடி மோசடி- ஈ.வி.பி சந்தோஷ் ரெட்டி கைது
Published on

ரூ.23 கோடி மோசடி செய்த புகாரில் ஈ.வி.பி. சந்தோஷ் ரெட்டியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் சுமார் ரூ.23 கோடி மோசடி செய்த புகாரில் சந்தோஷ் ரெட்டியை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புகாரின் பேரில் சந்தோஷ் ரெட்டி உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஈவிபி குழுமத்தின் சந்தோஷ் ரெட்டி கைதான நிலையில், அவரது கூட்டாளிகளான வினோத் மற்றும் கிரண் ராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சோழிங்கநல்லூரில் 34.75 ஏக்கர் நிலம், ஸ்டூடியோக்கள் உள்ளிட்டவைகளை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், கட்டடங்கள் அனைத்தும் சட்டப்பூர்வ அனுமதி பெற்றவை என போலி வாக்குறுதி அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com