என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "serial"

    • அதிகாலையில் குடியிருப்பில் சார்ட் சர்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
    • சிறுவர்களின் விருப்பத்தின்படி, அவர்களது குடும்பத்தினர் இருவரின் கண்களையும் தானம் செய்தனர்.

    சோனி டிவியில் ஸ்ரீமத் ராமாயணம் இந்தி தொடரில் நடித்து புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் சர்மா (10 வயது) விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழில் சன் டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இவர் வீர ஹனுமான் தொடரில் லட்சுமணனாகவும் நடித்துள்ளார். சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் சிறுவயது சைஃப் அலிகானாகவும் நடித்திருந்தார்.

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் உள்ள வீட்டில் வீர் சர்மா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடியிருப்பில் சார்ட் சர்கியூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

    விபத்து நடந்த நேரத்தில், தந்தையான ஜிதேந்திர சர்மா பஜனை நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றிருந்தார், தாயார் ரீட்டா சர்மா வேலை விஷயமாக மும்பையில் இருந்தார்.

    தீ விபத்து ஏற்பட்டபோது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வீர் மற்றும் அவரது சகோதரர் சௌரியா, புகை மூட்டத்தால் மூச்சுத் திணறி சுயநினைவை இழந்தனர்.

    வீட்டின் அறையில் இருந்து புகை வந்ததை அறிந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சிறுவர்களின் விருப்பத்தின்படி, அவர்களது குடும்பத்தினர் இருவரின் கண்களையும் தானம் செய்தனர்.

    கோட்டா போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக தகவல்.
    • தற்கொலை முயற்சி தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது 'கயல்' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

    சின்னத்திரை நடிகை அமுதா தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதை அறிந்த அமுதாவின் தோழி, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

    இதற்கிடையே, அமுதா தற்கொலை முயற்சி செய்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், அமுதாவின் கணவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சின்னத்திரை நடிகர், நடிகைகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எஸ்.வி.சேகர் - ஷோபனா முதன்மை கதாபாத்திரமாக நடித்துள்ளனர்
    • "மீனாட்சி சுந்தரம்" புத்தம் புதிய மெகாத்தொடர் வருகிற ஏப்ரல் 28 முதல் ஒளிப்பரப்பாகிறது.

    கலைஞர் தொலைக்காட்சியின் மற்றொரு வித்தியாசமான படைப்பில் எஸ்.வி.சேகர் - ஷோபனா முதன்மை கதாபாத்திரமாக நடிக்கும் "மீனாட்சி சுந்தரம்" புத்தம் புதிய மெகாத்தொடர் வருகிற ஏப்ரல் 28 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

    கதையின் முதன்மை கதாபாத்திரமான சுந்தரத்தின் மனைவி காலமான பிறகு, சுந்தரம் தனது இரண்டு மகன்களான பிரபு, அருள் மற்றும் தனது ஒரே மகளான வைஷ்ணவியுடன் கஸ்தூரி இல்லத்தில் வசித்து வருகிறார்.

    இதில், சுந்தரத்துக்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. மறுபுறம், நாயகியான மீனாட்சி சுந்தரத்தை தீவிரமாக தேடி வருகிறாள். ஒரு வழியாக சுந்தரத்தை கண்டுபிடிக்கும் மீனாட்சி, சுந்தரத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படுகிறார்.

    இறுதியாக, இவர்களது குடும்பத்துக்கு வரும் சிக்கல்கள் என்னென்ன? இந்த திருமணம் நடக்க காரணம் என்ன? போன்ற சுவாரஸ்யமான தேடல்களுடன் கதை விறுவிறுப்பாக தொடரும்.

    • இன்று காலை 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து மழை வேகமாக பெய்ய தொடங்கியது.
    • மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கோப்பணம் பாளையம், இருக்கூர், சேளூர், பிலிக்கல்பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், குரும்பலம் மகாதேவி, ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, சுள்ளி பாளையம், பெருங்குறிச்சி, மணியனூர், கந்தம்பாளையம் , வசந்தபுரம், தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    தொடர்ந்து மழை வேகமாக பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக சாலை ஓரங்களில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் என பல்வேறு கடைக்காரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

    கடந்த முறை பெய்த கனமழையின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பல்வேறு வகையான பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இந்நிலையில் மழையின் காரணமாக சாலையின் இருபுறமும் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.

    காலை முதலே மழை பெய்து வருவதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்து உள்ளார். 

    • நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி யில் அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும், ஒரு பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றனர்.
    • கைவரிசை காட்டிய மர்ம நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி யில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவை வழக்கம்போல் பூசாரிகள் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை யில் கோவில் பூசாரி கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும், ஒரு பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றனர். இந்த கொள்ளையர்கள் முகமூடி கொள்ளையர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு ஆயில்பட்டி போலீசார் மற்றும் பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதே கோவிலில் ஏற்கனவே 2 தடவை இது போன்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு ராசிபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ச்சியாக கோவில்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என பகுதிக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • சேலம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் வீரகனூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர், தம்மம்பட்டி, சங்ககிரி, கெங்கவல்லி, எடப்பாடி, மேட்டூர் சேலம் ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஏற்காடு - 18, கெங்கவல்லி - 10, வீரகனூர் - 10, ஆணைமடுவு - 10, தம்மம்பட்டி - 7.2, எடப்பாடி- 6.6, ஆத்தூர் -4.8, ஓமலூர்- 4, கரிய கோவில் - 4, மேட்டூர் - 1.8, சங்ககிரி - 1.1, கடையாம்பட்டி - 1, சேலம்- 0.6 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 79.10 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியதும், கோடை மழை அவ்வபோது பெய்து வருகிறது.
    • இந்த நிலையில் நாளை முதல் மாக்கா புயல் உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழகத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடங்கியதும், கோடை மழை அவ்வபோது பெய்து வருகிறது. மேலடுக்கு காற்று சுழற்சியால் பல்வேறு மாவட்டங்களில் இந்த மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நாளை முதல் மாக்கா புயல் உருவாகும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இதனால் கடந்த 2 மாதங்களாக பொதுமக்களை வாட்டி வதைத்த வெப்பம் படிப்படியாக குறைந்து வந்தது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிக்கு கோடை மழை தொடங்கியது. சுமார் 6 மணி வரை கனமழை பெய்தது. பின்னர் இரவு முழுவதும் லேசான அடை மழை தொடர்ந்து பெய்ததால், வெப்பநிலை முற்றிலம் மாறி குளிர் காற்று வீச தொடங்கியது

    இன்று அதிகாலை 5 மணி முதல் வானம் மப்பும் மந்தாரமும் ஆக இருந்து வருகிறது. லேசான அடைமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால் குளிரான சீதோஷ்னம் தொடர்ந்து நிலவி வருகிறது. பொதுமக்கள் கையில் குடையுடன் நடனமாடி வருகின்றனர். நேற்று மாலை பெய்த கனமழையால் நாமக்கல் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. கோடை மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவுப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம் வருமாறு-

    எருமப்பட்டி 3 மி.மீ., குமாரபாளையம் 5.40 மி.மீ., மங்களபுரம் 5.80 மி.மீ., மோகனூர் 8 மி.மீ., நாமக்கல் 28 மி.மீ., பரமத்தி வேலூர் 16 மி.மீ., புதுச்சத்திரம் 20 மி.மீ., ராசிபுரம் 22 மி.மீ., சேந்தமங்கலம் 7 மி.மீ., திருச்செங்கோடு 8 மி.மீ., நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் 33.5 மி.மீ., கொல்லிமலை செம்மேடு 5 மி.மீ.

    • வழக்கமான தொலைக்காட்சி தொடர்களில் இருந்து தனித்து நிற்கிறது.
    • சொந்த குடும்ப உறவுகளைப் பற்றி சிந்திக்க வாய்ப்பளிக்கிறது.

    பனி விழும் மலர்வணம் ஒரு அண்ணன் மற்றும் சகோதரியின் உறவைப் பற்றிய ஒரு ஆத்மார்த்தமான கதை.

    'மாமியார் மருமகள் நாடகம்' அல்லது 'கணவன்-மனைவியின் சண்டை' போன்றவற்றைச் சுற்றி வரும் வழக்கமான தொலைக்காட்சி தொடர்களில் இருந்து இந்த சீரியல் தனித்து நிற்கிறது.

    இந்த சீரியலின் கதைக்களம் புத்துணர்ச்சியூட்டுகிறது, ஏனெனில் இது ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான அழகான, ஆனால் சிக்கலான உறவைப் பற்றி பேசுகிறது. இது பார்வையாளர்கள் தங்கள் சொந்த குடும்ப உறவுகளைப் பற்றி சிந்திக்கவும் வாய்ப்பளிக்கிறது.

    இந்த நிகழ்ச்சியை சென்னையில் உள்ள பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ முன்பு விஜய் தொலைக்காட்சிக்காக பிக் பாஸ் ஜோடிகள், கலக்க போவது யாரு (சீசன்கள் 5 முதல் 8), ராஜு வூட்லா பார்ட்டி, கதைநாயகி மற்றும் பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தயாரித்துள்ளது. இந்தத் தொடர் ஜூன் 24, 2024 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது.

    இந்த சீரியலை ஜெகன் பாஸ்கரன் தயாரித்து, பிரான்சிஸ் கதிரவன் இயக்குகிறார். சீரியலின் முன்னணி நடிகர்களில் சித்தார்த் குமரன், வினுஷா தேவி, ரய்யான் மற்றும் ஷில்பா ஆகியோர் உள்ளனர். இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:00 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • விஷம் அல்லது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
    • சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என அடையாளம் காணப்பட்ட இருவரை போலீஸ் கைது செய்துள்ளது.

    ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சி சீரியல் நிகழ்ச்சியான கிரைம் பேட்ரோல் -இல் நடித்து நடித்து மக்களுக்கு பரீட்சயமான நடிகை சப்னா சிங். இவருக்கு14 வயதில் சாகர் கங்வார் என்ற மகன் இருந்த நிலையில் தற்போது அவர் மர்மான முறையில் உயிரிழந்தார்.

     

    உத்தரப் பிரதேசம் பரேலியில் தனது தாய் மாமா ஓம் பிரகாஷுடன் தங்கியிருந்த 8ஆம் வகுப்பு படித்துவரும் சாகர், கடந்த டிசம்பர் 7ஆம் தேதி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இசத்நகர் பகுதியில் உள்ள அடலாக்கியா கிராமத்திற்கு அருகே அவரது உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் மரணத்திற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் விஷம் அல்லது அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    தனது மகனின் மரணத்துக்கு கேட்டு நடிகை சப்னா சிங் உறவினர்களுடன் பரேலி காவல் நிலையத்தின் முன் நேற்று வரை போராட்டம் நடத்தி வந்த நிலையில் போலீசாரின் வாக்குறுதியை போராட்டத்தை நிறுத்த உடன்பட்டார்.

     

    இந்நிலையில் இன்று [புதன்கிழமை], சாகரின் நண்பர்களான அனுஜ் மற்றும் சன்னி என அடையாளம் காணப்பட்ட இருவரை, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் போலீஸார் கைது செய்தனர். அனுஜும் சன்னியும் சாகருடன் போதைப்பொருள் மற்றும் மது அருந்தியதாக விசாரணையின்போது ஒப்புக்கொண்டனர்.

    அளவுக்கு அதிகமாக அருந்தியதால் சாகர் மயங்கி விழுந்தான் என்றும் பீதியடைந்த அவர்கள் அவனது உடலை வயல்வெளிக்கு இழுத்துச் சென்றுவிட்டனர் என்றும் வாக்குமூலம் அழித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

    ×