என் மலர்
நீங்கள் தேடியது "சின்னத்திரை நடிகை"
- 2019-ம் ஆண்டு முதல் நுரையீரல் பைப்ரோ சிஸ் என்ற நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.
- ரஷ்மி லீலா உடலுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
கன்னட சின்னத்திரை உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரஷ்மி லீலா. காவ்யாஞ்சலி, ஆனந்த சாகர், பாந்தவ்யா போன்ற தொடர் மூலம் சின்னத்திரை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து உள்ளார்.
சின்னத்திரையில் பல்வேறு கேரக்டரில் நடித்து வந்த ரஷ்மி லீலா கிராம தேவதே, சிகிமுத்து போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். ரஷ்மி லீலா கணவர் சரிக்குமஞ்சு கன்னட தொலைக்காட்சியில் எழுத்தாளராகவும், வசன கர்த்தாகவும் இருக்கிறார்.
புன்னகை நிறைந்த அழகாலும், நடிப்பாலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையை அலங்கரித்து வந்த ரஷ்மி லீலா கடந்த 2019-ம் ஆண்டு முதல் நுரையீரல் பைப்ரோ சிஸ் என்ற நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக நோய் பாதிப்பினால் அவதிப்பட்டு வந்த ரஷ்மி லீலா மீண்டும் படப்பிடிப்புக்கு வருவேன் என்று தன்னம்பிக்கையுடன் இருந்தார். இந்நிலையில் 37 வயதான ரஷ்மி லீலா சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
இது குறித்து ரஷ்மி லீலா கணவர் சரிக்குமஞ்சு வெளியிட்டுள்ள பதிவில், என் மனைவி ரஷ்மி லீலா நுரையீரல் பைப்ரோசியுடன் சில ஆண்டுகளாக போராடினார். சமீபத்தில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. விரைவில் குணமடைந்து வருவார் என்ற நம்பிக்கையில் இருந்த போது உடல்நிலை மோசமடைந்து துரதிர்ஷ்டவசமாக நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று பனசங்கரி மின் மயானத்தில் நடைபெறும் என பதிவிட்டுள்ளார்.
ரஷ்மி லீலா உடலுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
- வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று வந்துள்ளார்.
- அவர் மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்து விட்டதால் மிகவும் அச்சம் அடைந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்கின்றனர். இந்த மலை பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலையில் ஏற வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகையான அர்ச்சனா ரவிச்சந்திரன் என்பவர் ஓரிரு தினங்களுக்கு முன்பு வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் தடை மீறி மலை உச்சி வரை சென்று வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் மலை ஏறி இறங்க மிகவும் சிரமம் அடைந்ததாகவும், இருள் சூழ்ந்து விட்டதால் மிகவும் அச்சம் அடைந்து விட்டதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் அவர் மலையேற்றம் செய்கிறீர்கள் என்றால் சீக்கிரமாகவே தொடங்குங்கள், எப்போதும் சூரிய அஸ்தமனத்திற்கு முன் இறங்குவதை திட்டமிடுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
மலைக்கு தடையை மீறி சென்று வந்த அவர் பிறரையும் மலை ஏற ஊக்குவிப்பது போன்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக தகவல்.
- தற்கொலை முயற்சி தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது 'கயல்' என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை நடிகை அமுதா தன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை அறிந்த அமுதாவின் தோழி, அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இதற்கிடையே, அமுதா தற்கொலை முயற்சி செய்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அமுதாவின் கணவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது சின்னத்திரை நடிகர், நடிகைகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து கைது.
- 5 கிராம் மெத்தபெட்டமைன் என்கிற போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை அண்ணாசாலை பகுதியில் பிரபல சீரியலில் நடித்து வரும் சின்னத்திரை துணை நடிகை மீனா என்பவரை போலீசார் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இவர், அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் நடவிக்கை மேற்கொண்டுள்ளனர்.
துணை நடிகை மீனாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதை அடுத்து, அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் என்கிற போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
நடிகை மீனா, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.






