சென்னையில் போதைப் பொருள் வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது

அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து கைது.5 கிராம் மெத்தபெட்டமைன் என்கிற போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் போதைப் பொருள் வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது
Published on

சென்னை அண்ணாசாலை பகுதியில் பிரபல சீரியலில் நடித்து வரும் சின்னத்திரை துணை நடிகை மீனா என்பவரை போலீசார் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளனர்.

இவர், அண்ணாசாலையில் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் நடவிக்கை மேற்கொண்டுள்ளனர்.

துணை நடிகை மீனாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதை அடுத்து, அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் என்கிற போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

நடிகை மீனா, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com