பரமத்தி வேலூர் பகுதியில் தொடர் மழை

இன்று காலை 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து மழை வேகமாக பெய்ய தொடங்கியது. மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
பரமத்தி வேலூர் பகுதியில் தொடர் மழை
Published on

பரமத்திவேலூர்:

பரமத்தி வேலூர் நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், பாலப்பட்டி, மோகனூர், பரமத்தி, கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கோப்பணம் பாளையம், இருக்கூர், சேளூர், பிலிக்கல்பாளையம், அ.குன்னத்தூர், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், குரும்பலம் மகாதேவி, ஜமீன் இளம் பள்ளி, சோழசிராமணி, சுள்ளி பாளையம், பெருங்குறிச்சி, மணியனூர், கந்தம்பாளையம் , வசந்தபுரம், தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறுநல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

தொடர்ந்து மழை வேகமாக பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக சாலை ஓரங்களில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் என பல்வேறு கடைக்காரர்கள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.

கடந்த முறை பெய்த கனமழையின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பல்வேறு வகையான பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் மழையின் காரணமாக சாலையின் இருபுறமும் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.

காலை முதலே மழை பெய்து வருவதால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்து உள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com