search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராசிபுரம் அருகே கோவில்களில் தொடர் கொள்ளை
    X

     பணம் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு இருக்கும் காட்சி

    ராசிபுரம் அருகே கோவில்களில் தொடர் கொள்ளை

    • நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி யில் அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும், ஒரு பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றனர்.
    • கைவரிசை காட்டிய மர்ம நபர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைப்பு

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கார்கூடல்பட்டி ஊராட்சி யில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவை வழக்கம்போல் பூசாரிகள் பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை யில் கோவில் பூசாரி கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 லட்சம் பணத்தையும், ஒரு பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை கொள்ளை யடித்துச் சென்றனர். இந்த கொள்ளையர்கள் முகமூடி கொள்ளையர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    சம்பவ இடத்திற்கு ஆயில்பட்டி போலீசார் மற்றும் பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    கொள்ளையர்களை கண்டுபிடிக்க ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதே கோவிலில் ஏற்கனவே 2 தடவை இது போன்று கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    சில நாட்களுக்கு முன்பு ராசிபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ச்சியாக கோவில்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என பகுதிக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×