search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former President"

    • உடல் நலக்குறைவு காரணமாக பிரதீபா பாட்டில், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • பிரதீபா பாட்டில் உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    புனே:

    இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் (வயது 89). 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

    இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பிரதீபா பாட்டில், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் மார்பு தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால், தனக்காக ஊதியம் இன்றி பணியாற்றி வரும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி புஷ் ‘பீட்சா’ வழங்கினார். #GeorgeWBush #Pizza
    வாஷிங்டன்:

    மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறுவதில் சிக்கல் நீடிப்பதால் அமெரிக்காவில் பல்வேறு அரசுத்துறைகள் முடங்கி உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளனர். மேலும் பலர் ஊதியம் இன்றி வேலை பார்த்து வருகிறார்கள்.



    இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், தனக்காக ஊதியம் இன்றி பணியாற்றி வரும் ரகசிய சேவை பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு ‘பீட்சா’ வாங்கி கொடுத்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவரே நேரில் சென்று ஒவ்வொருவருக்கும் ‘பீட்சா’ வை வழங்கினார்.

    இது தொடர்பாக ஜார்ஜ் புஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ‘பீட்சா’ வழங்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “நமக்கு ஆதரவு அளிக்கும் நம்முடைய சக மனிதர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.  #GeorgeWBush #Pizza
    அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் செலவுக்காக பணம் திரட்டிய ஊழல் வழக்கில் சிக்கிய மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனின் பணம் 65 லட்சம் டாலர்கள் முடக்கப்பட்டது. #Maldivesformerpresident #Yameen
    கொழும்பு:

    இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. 
     
    மாலத்தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது சோலியிடம் தோல்வியடைந்தார். 

    58.4 சதவீதம் வாக்குகளை பெற்ற முஹம்மது சோலிஹ் வெற்றிபெற்றதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதனால், மாலத்தீவின் புதிய அதிபராக இப்ராகிம் முகமது சோலிஹ் பதவி ஏற்றார்.

    இதற்கிடையில், தனது பதவி, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தேர்தல் செலவுகளுக்கு நிதி திரட்டியதாக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது.

    இவ்விவகாரம் தொடர்பாக நேற்று அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அப்துல்லா யாமீனுக்கு சொந்தமான வங்கி கணக்கில் உள்ள சுமார் 65 லட்சம் டாலர்கள் மதிப்பிலான பணத்தை போலீசார் முடக்கி வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Maldivesformerpresident #Yameen
    முறைகேடுகளை தடுப்பதற்காக ஓட்டு சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் கூறியுள்ளார்.
    வாஷிங்டன்:

    இந்தியாவில் நீண்ட காலமாக எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடப்பதாகவும் மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கே மாற வேண்டும் என்று பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இப்போது இதே போன்ற கோரிக்கை அமெரிக்காவிலும் எழுந்துள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்பும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதை விரும்பாத ரஷியா ஓட்டுப்பதிவு கம்ப்யூட்டர்களை ஹேக்கிங் செய்து ஓட்டுகளை டிரம்புக்கு ஆதரவாக மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதை ரஷியா மறுத்துள்ளது. ஆனாலும் சந்தேகம் நீடித்து வருகிறது.

    அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. அங்கு நாடு முழுவதும் ஒரே முறையில் தேர்தல் நடத்தப்படுவது இல்லை. தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து அந்தந்த மாகாணங்களே முடிவு செய்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி சில மாகாணங்களில் ஓட்டு சீட்டு முறை உள்ளது. சில மாகாணங்களில் ஓட்டு எந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில மாகாணங்களில் கம்ப்யூட்டர் மூலம் இணையதளம் வழியாக ஓட்டு பதிவு செய்யும் நடைமுறையை பயன்படுத்துகின்றனர்.

    இவ்வாறு 30 மாகாணங்களில் கம்ப்யூட்டர் ஓட்டுப்பதிவு முறை நடைபெற்றது. இதில் தான் 21 மாகாணங்களில் கம்ப்யூட்டரில் வைரஸ்களை அனுப்பி ஹேக்கிங் செய்து மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

    எனவே இந்த மோசடி நடக்காமல் இருக்க மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    முன்னாள் அதிபர் பில்கிளிண்டனும் இப்போது அந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார். அவர் இதுபற்றி கூறியதாவது:-

    எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் ஓட்டுப்பதிவு செய்வதில் பாதுகாப்பு உள்ளது என்பதை உறுதி செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. அதில் தவறு நடப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.

    எனவே தவறே நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஓட்டு சீட்டு முறைதான் சிறந்தது. எனவே அதற்கு அனைத்து மாகாணங்களும் மாற வேண்டும். தேர்தல் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    ஏற்கனவே எலக்ட்ரானிக் ஓட்டு முறைக்கு மாறி இருந்த விர்ஜினியா மாகாணம் இனி ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்தப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் எச். புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். #GeorgeHWBush
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்தவர் ஜார்ஜ் எச். புஷ் (93).  இவரது மனைவி பார்பரா புஷ் தனது 92-வது வயதில் கடந்த மாதம் மரணம் அடைந்தார்.

    அமெரிக்க ஜனாதிபதிகளில் 73 வருடங்கள் நீண்ட காலம் வாழ்ந்த தம்பதி என்ற பெருமையை பெற்ற இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் முன்னாள் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.

    இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் எச். புஷ் உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக, ஜார்ஜ் புஷ்ஷின் அலுவலக செய்தி தொடர்பாளர் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷுக்கு கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்கிடையே, நேற்றும் புஷ்ஷுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மைனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக மீண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார். #GeorgeHWBush
    ×