என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்பத்திரியில் அனுமதி"

    • சந்துரு ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளும், நந்த பெருமாள் 7 மாத்திரைகளும், நரேஷ் 3 மாத்திரைகளும் சாப்பிட்டுள்ளனர்.
    • நரேஷ், வெற்றி மதன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் சந்துரு(வயது 12).

    அதே பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் மகன் நந்த பெருமாள் (12), கீழ பத்தையை சேர்ந்த மாரியப்பன் மகன் நரேஷ் (12), ஜீவா மகன் வெற்றி மதன் (12). இவர்கள் 4 பேரும் கீழ பத்தையில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று பள்ளிக்கு மருத்துவக்குழுவினர் சென்று மாணவ-மாணவிகளை பரிசோதனை செய்தனர். அப்போது சத்து குறைபாடு உள்ள மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதுபோல சந்துரு, நந்த பெருமாள், நரேஷ், வெற்றி மதன் ஆகியோருக்கும் மருத்துவ குழுவினர் சத்து மாத்திரைகள் வழங்கினர்.

    இந்நிலையில் மாலை இடைவேளையின்போது 4 பேரும் விளையாட்டுக்காக யார் சத்து மாத்திரையை அதிகளவில் சாப்பிடுவது என்று போட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சந்துரு ஒரே நேரத்தில் 15 மாத்திரைகளும், நந்த பெருமாள் 7 மாத்திரைகளும், நரேஷ் 3 மாத்திரைகளும், வெற்றி மதன் 4 மாத்திரைகளும் சாப்பிட்டுள்ளனர்.

    பின்னர் 4 பேரும் தங்களது வீடுகளுக்கு சென்று விட்ட நிலையில், வீட்டிற்கு சென்றதும் 4 பேருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடும் வயிற்று வலியும் ஏற்பட்டது.

    இதனால் பதறிய பெற்றோர்கள் 4 பேரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து சந்துரு, நந்த பெருமாள் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நரேஷ், வெற்றி மதன் ஆகியோர் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து களக்காடு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டாக அதிக அளவில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் களக்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீசாரிடம் கனிம வள கொள்ளை நடப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒரு வாரம் முன்பு புகார் அளித்தார்.
    • சேகரின் வீடு புகுந்து வெளிப்புறத்தில் தெருவில் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஏ . மருர் கிராமத்தில் தொடர்ச்சியாக கனிம வள கொள்ளை நடப்பதாகவும் டிராக்டரில் கிராவல் எடுத்துச் சொல்வதாகவும் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் தெரிவித்தார். கிராம நிர்வாக அலுவலருக்கு கிராவல் கொள்ளை பற்றி ஏ. மருர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் சேகர் தகவல் தெரிவித்ததாகவும் இதன் காரணமாக கிராவலை கொள்ளையடிக்கும் கும்பலுக்கும் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் சேகருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சிறுப்பாக்கம் காவல் நிலையத்திலும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் போலீசாரிடம் கனிம வள கொள்ளை நடப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒரு வாரம் முன்பு புகார் அளித்தார்.

    இந்த புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுக்க சேகர் தான் காரணம் எனக் கூறி இதில் ஆத்திரம் அடைந்த கனிம வள கொள்ளைகள் ஈடுபடும் கும்பல் சேகரின் வீடு புகுந்து வெளிப்புறத்தில் தெருவில் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சேகர் அவரது உறவினர்கள் 3 பேர் பலத்த காயமடைந்து கள்ளக்கு றிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் தங்களது அப்பாக்கள் திட்டுவர் என்பதால் மாணவிகள் பயந்தனர்.
    • மாணவிகள் சானிடைசரை குடித்தாக தெரிவித்தனர்.

    கோவை:

    கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவரது தோழி பட்டணத்தை சேர்ந்த 15 வயது மாணவி. இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் இவர்களுக்கு பள்ளியில் கொடுக்கப்பட்டது. தேர்வு முடிவில் இவர்கள் 2 பேரும் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தனர்.

    குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் தங்களது அப்பாக்கள் திட்டுவர் என்பதால் மாணவிகள் பயந்தனர். இதனால் வீட்டில் சொல்லாமல் பயத்தில் இருந்தனர்.

    குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவிகள் 2 பேரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி இவர்கள் வீட்டில் இருந்து சானிடைசரை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றனர். பள்ளியில் வைத்து குடிநீரில் கலந்து குடித்தனர்.

    சிறிது நேரத்துக்கு பின்னர 2 பேரும் வாந்தி எடுத்தனர். இதனை பார்த்த ஆசிரியர்கள் என்னவென்று கேட்டனர். அதற்கு மாணவிகள் சானிடைசரை குடித்தாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாணவிகள் 2 பேரையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாலிபர்கள் இருவரும் கடையிலேயே கேக்கை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது.
    • அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஷ், சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (18), சக்திவேல் (20). இவர்கள் இருவரும் தங்களது சித்தி மகளின் பிறந்தநாளுக்காக கருக்குப்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பேக்கரி கடையில் கேக் வாங்கி இருந்தனர்.

    அவர்கள் பிறந்தநாள் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடி கேக்கை வெட்ட முயன்றனர். அப்போது வெட்ட முடியாத அளவுக்கு கேக் மிகவும் கடினமாக இருந்ததாக தெரிகிறது.

    இதையடுத்து ராஜேசும், சக்திவேலும் அந்த கேக்கை எடுத்துக்கொண்டு பேக்கரி கடைக்கு சென்று இது குறித்து அங்கிருந்த ஊழியரிடம் தெரிவித்தனர்.

    ஆனால் பேக்கரி கடை ஊழியர்கள் கேக் நன்றாக உள்ளது. இப்போதே நீங்கள் கேக்கை சாப்பிடலாம் என்று கூறினர்.

    இதையடுத்து ராஜேசும், சக்திவேலும் கடையிலேயே அந்த கேக்கை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் வாந்தி, வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராஜேஷ், சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கெட்டுப்போன கேக்கை சாப்பிட்டதால் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உடல் நலக்குறைவு காரணமாக பிரதீபா பாட்டில், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • பிரதீபா பாட்டில் உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    புனே:

    இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் (வயது 89). 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

    இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பிரதீபா பாட்டில், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் மார்பு தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×