முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் ஆஸ்பத்திரியில் அனுமதி

உடல் நலக்குறைவு காரணமாக பிரதீபா பாட்டில், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரதீபா பாட்டில் உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் ஆஸ்பத்திரியில் அனுமதி
Published on

புனே:

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் (வயது 89). 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பிரதீபா பாட்டில், மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் மார்பு தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com