search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bill clinton"

    • பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் கடந்த 4 ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் குடியேறினார். இதற்கிடையே வாடகை விமானம் மூலம் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பினார்.

    பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையிலும், பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையிலும் நவாஸ் ஷெரீப் சொந்த நாடு திரும்பியுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் லாகூரில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    பல வருடங்களுக்குப் பிறகு இன்று உங்களைச் சந்திக்கிறேன், ஆனால் உங்களுடனான எனது அன்பு உறவும் அதேதான். இந்த உறவில் எந்த வித்தியாசமும் இல்லை.

    இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க விரும்பியபோது, வெளிநாட்டு அரசாங்கங்கள் பெரும் அழுத்தங்களைக் கொடுத்தன.

    அணு ஆயுத சோதனை நடத்தாமல் இருப்பதற்காக முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நமக்கு 5 பில்லியன் டாலர் தருவதாக கூறினார்.

    ஆனால் அவற்றையும் மீறி 1998-ம் ஆண்டு நாம் அணு ஆயுத சோதனையை நடத்தி இந்தியாவின் அணு ஆயுத சோதனைக்கு தகுந்த பதிலடி கொடுத்தோம் என தெரிவித்தார்.

    • பில் கிளிண்டனுக்கு (வயது 76) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன.

    வாஷிங்டன் :

    அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு (வயது 76) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அவர் நேற்று முன்தினம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. மொத்தத்தில் நான் நன்றாக உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு கிளிண்டன், சிறுநீர்ப்பாதை தொற்றால் பாதிக்கப்பட்டு, அது ரத்தத்தில் கலந்து விட்டதால் அவதிப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப்பின்னர் குணம் அடைந்தது நினைவுகூரத்தக்கது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் - மோனிகா லெவின்ஸ்கி காதல் விவகாரம் குறித்து மீண்டும் சர்ச்சை எழுப்பியதற்கு ஹிலாரி அதிரடியாக பதில் அளித்துள்ளார். #BillClinton #Hillary

    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன். இவர் பதவி வகித்த போது அதாவது 1998-ம் ஆண்டில் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பெண் ஊழியர் மோனிகா லெவின்ஸ்கி-பில் கிளிண்டன் காதல் விவகாரம் சூடுபிடித்தது. அப்போது இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதை தொடர்ந்து பில் கிளிண்டனை அதிபர் பதவியில் இருந்து நீக்க வகை செய்யும் தீர்மானத்தை எதிர்கட்சியாக இருந்த குடியரசு கட்சி கொண்டு வந்தது. ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது.

    தற்போது ‘மீ டூ’ விவகாரம் சர்வதேச அளவில் சூடுபிடித்துள்ள நிலையில் கிளிண்டன்-மோனிகா லெவின்ஸ் கியின் காதல் விவரம் குறித்த பிரச்சினை 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிளம்பியுள்ளது.

     


    நியூயார்க்கை சேர்ந்த குடியரசு கட்சியின் செனட்டர் கிர்ஸ்டன் கில்பிராண்டு அளித்த பேட்டியில் கூறும் போது, ‘செக்ஸ்’ பிரச்சினையில் சிக்கிய கிளிண்டன் அப்போதே தனது பதவியில் இருந்து விலகியிருக்க வேண்டும். தனது அதிகாரத்தை பயன்படுத்தி மோனிகா லெவின்ஸ்கியுடன் ‘செக்ஸ்’சில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டினார்.

    அதற்கு கிளிண்டனின் மனைவியும், அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் பதில் அளித்து இருக்கிறார். ‘‘பில் கிளிண்டன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தவில்லை. அதை என்னால் நிச்சயமாக கூற முடியும். இப்பிரச்சினையின் போது மோனிகா லெவின்ஸ்கிக்கு 22 வயது. அவர் ‘மேஜர்’ ஆக இருந்தார். அவரது விருப்பத்தின் பேரில் தான் கிளிண்டன் அவர் மீது காதல் வயப்பட்டிருந்தார் என தெரிவித்துள்ளார்.  #BillClinton #Hillary

    முறைகேடுகளை தடுப்பதற்காக ஓட்டு சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன் கூறியுள்ளார்.
    வாஷிங்டன்:

    இந்தியாவில் நீண்ட காலமாக எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடப்பதாகவும் மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கே மாற வேண்டும் என்று பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இப்போது இதே போன்ற கோரிக்கை அமெரிக்காவிலும் எழுந்துள்ளது. 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்பும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதை விரும்பாத ரஷியா ஓட்டுப்பதிவு கம்ப்யூட்டர்களை ஹேக்கிங் செய்து ஓட்டுகளை டிரம்புக்கு ஆதரவாக மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதை ரஷியா மறுத்துள்ளது. ஆனாலும் சந்தேகம் நீடித்து வருகிறது.

    அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. அங்கு நாடு முழுவதும் ஒரே முறையில் தேர்தல் நடத்தப்படுவது இல்லை. தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து அந்தந்த மாகாணங்களே முடிவு செய்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

    இதன்படி சில மாகாணங்களில் ஓட்டு சீட்டு முறை உள்ளது. சில மாகாணங்களில் ஓட்டு எந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இன்னும் சில மாகாணங்களில் கம்ப்யூட்டர் மூலம் இணையதளம் வழியாக ஓட்டு பதிவு செய்யும் நடைமுறையை பயன்படுத்துகின்றனர்.

    இவ்வாறு 30 மாகாணங்களில் கம்ப்யூட்டர் ஓட்டுப்பதிவு முறை நடைபெற்றது. இதில் தான் 21 மாகாணங்களில் கம்ப்யூட்டரில் வைரஸ்களை அனுப்பி ஹேக்கிங் செய்து மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

    எனவே இந்த மோசடி நடக்காமல் இருக்க மீண்டும் ஓட்டு சீட்டு முறைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    முன்னாள் அதிபர் பில்கிளிண்டனும் இப்போது அந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார். அவர் இதுபற்றி கூறியதாவது:-

    எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் ஓட்டுப்பதிவு செய்வதில் பாதுகாப்பு உள்ளது என்பதை உறுதி செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. அதில் தவறு நடப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.

    எனவே தவறே நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் ஓட்டு சீட்டு முறைதான் சிறந்தது. எனவே அதற்கு அனைத்து மாகாணங்களும் மாற வேண்டும். தேர்தல் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    ஏற்கனவே எலக்ட்ரானிக் ஓட்டு முறைக்கு மாறி இருந்த விர்ஜினியா மாகாணம் இனி ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்தப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ×