என் மலர்
நீங்கள் தேடியது "Nawaz Sharif"
- இந்தியா ஜி20 மாநாட்டினை தலைமை ஏற்று நடத்தி எங்கோ சென்றுவிட்டது.
- நாம் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுக்கிறோம் என நவாஸ் ஷெரீப் கூறினார்.
லாகூர்:
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் தற்காலிக பிரதமராக பலூசிஸ்தான் எம்.பி. அன்வர் உல் ஹக் ககர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் செயல்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தானின் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது.
நிதி நிலைமையை சமாளிக்க பெட்ரோல் டீசல் மீதான வரி மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 26 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 17 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 305 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில்
தற்போது கூடுதல் வரியுடன் சேர்த்து பெட்ரோல் ஒரு லிட்டர் 331 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் 329 ரூபாய்-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதற்கிடையே, ஊழல் வழக்குகளில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வரும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்டோபர் 21-ம் தேதி நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், லண்டனில் இருந்தபடி காணொலி வாயிலாக தனது கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டதில் நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், பாகிஸ்தானின் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாக வீழ்ச்சி நிலையில் சென்று கொண்டிருக்கிறது. நிலவில் தடம் பதித்தும், ஜி 20 மாநாட்டினை தலைமை ஏற்று நடத்தியும் இந்தியா எங்கோ சென்றுவிட்டது. நாம் உலக நாடுகளிடம் கையேந்தி பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா செய்துள்ள சாதனைகளை பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை? வரும் தேர்தலில் நம் கட்சி பெரும்பான்மை பெற்று, மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என தெரிவித்தார்.
- அல் ஆசியா ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் பெற்று லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப் இப்போது வரை நாடு திரும்பவில்லை.
லாகூர் :
பனமாகேட் ஊழல் வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மீதான பல்வேறு ஊழல் வழக்குகளை அந்த நாட்டின் தேசிய பொறுப்புடமை கோர்ட்டு விசாரிக்க தொடங்கியது.
இதில் அல் ஆசியா ஆலை ஊழல் வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் பெற்று லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப் இப்போது வரை நாடு திரும்பவில்லை.
ஆனாலும் அவர் மீதான ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடமை கோர்ட்டு தொடர்ந்து விசாரித்து வருகிறது. அந்த வகையில் 37 ஆண்டுகளுக்கு முன்பு லஞ்சம் வாங்கி கொண்டு அரசு நிலத்தை தனியாருக்கு விற்றதாக நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று நடந்தது. அப்போது அரசியல்வாதிகள் மீதான வாழ்நாள் தடையை நீக்கும் வகையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தை சுட்டிக்காட்டி இந்த வழக்கில் இருந்து நவாஸ் ஷெரீப்பை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- பணமோசடி வழக்கில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது
- நவாஸ் ஷெரீப் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப். இவர் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் அவர்களின் சகோதரர் ஆவார். நவாஸ் ஷெரீப், உடல்நல காரணங்களுக்காக நவம்பர் 2019 முதல், லண்டனில் வசித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு மீண்டும் வருவதற்கு மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் முன்னாள் தலைவர் நவாஸ் ஷெரீப், மீண்டும் நாட்டிற்கு திரும்பி, தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தி, நான்காவது முறையாக பிரதமராக வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் மத்திய பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய ஷெரீப் தெரிவித்ததாவது:-
மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்பிய பிறகு கட்சி கூட்டத்தை நடத்தி, PML-Nன் தலைவர் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைப்பதற்காக காத்திருக்கிறேன். விரைவில் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏறுபட்டுள்ளதால் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்பியதும் அரசியலின் வரைபடமே மாறுவதை நீங்கள் காண்பீர்கள். கட்சிக்கு இளம் தலைமை தேவை. மரியம் நவாஸின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஷெபாஸ் ஷெரீப் கட்சி தலைவராவதற்கு முன்பு, மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் அதன் தலைவராக இருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர் கட்சிப் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து, ஷெபாஸ் கட்சி தலைமைப் பதவியை ஏற்றார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி "உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் சட்டம் 2023"ல் கையெழுத்திட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வருகிறது. இதன் மூலம் நவாஸ் ஷெரீப், 60 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தின் வாழ்நாள் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை பயன்படுத்துவதற்கான முதல்படி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 184(3)ன் கீழ் வரும் வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இந்த புதிய சட்டம் வழி வகுக்கிறது. இந்த சட்டம் கடந்த கால தீர்ப்புகளுக்கும் பொருந்தும். பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், பனாமா ஆவணங்கள் தொடர்பான வழக்கில், நவாஸ் ஷெரீப்பை ஜூலை 28, 2017 அன்று தகுதி நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபலமான பனாமா பேப்பர் வழக்கில், தனது மகனிடமிருந்து பெறப்பட்ட சம்பளத்தை மறைத்ததற்காக, நவாஸ் ஷெரீப்பிற்கு வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு பொதுப் பதவியையும் வகிக்க கூடாதென பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.
ஒரு வருடம் கழித்து, தேர்தல்கள் சட்டம் 2017-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பில், உச்சநீதிமன்றம், 62 மற்றும் 63 பிரிவின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர், எந்த அரசியல் கட்சியின் தலைமை பொறுப்பையும் ஏற்க கூடாது என்றும் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2019-ம் ஆண்டு லண்டன் சென்ற ஷெரீப் அதன் பின் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை.
- நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கி உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீபுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. உடல்நல பாதிப்புக் காரணமாக சிகிச்சை பெற லாகூர் நீதிமன்ற அனுமதியுடன் 2019-ம் ஆண்டு லண்டன் சென்ற ஷெரீப் அதன் பின் நாடு திரும்பவில்லை.
பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமாக பொறுப்பேற்றார். மேலும் நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டைடையும் ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கி உள்ளது.
இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு புதிததாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். பதவி காலம் நிறைவு பெறுவதால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழி நடத்த வசதியாக லண்டனில் இருந்து அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்ப நவாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகி ஒருவரும் ஒப்புக் கொண்டுள்ளார். எனினும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு முன் கூட்டியே தேர்தல் நடத்த கட்சி ஒப்புக் கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நவாஸ் ஷெரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க சட்ட திருத்தம் கொண்டு வர ஷபாஸ் அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னதாக தமது எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் லண்டன் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார். புதிய ராணுவ தளபதி நியமனம், பாகிஸ்தான் அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.
- நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கியது.
- நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான அவர் மீது பனாமா ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டன.
கடந்த 2018-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப்புக்கு ஒரு வழக்கில் 7 ஆண்டு ஜெயிலும், மற்றொரு வழக்கில் 11 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே உடல்நல பாதிப்புக் காரணமாக லண்டன் சென்று சிகிச்சை பெற லாகூர் கோர்ட்டில் அனுமதி கேட்டார். அவரது தண்டனையை நிறுத்தி வைத்து கோர்ட்டு லண்டன் செல்ல அனுமதி அளித்தது.
இதையடுத்து 2019-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் லண்டன் சென்றார். அதன் பின் அவர் நாடு திரும்பவில்லை.
இதற்கிடையே பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாய் ஷெரீப் புதிய பிரதமாக பொறுப்பேற்றார்.
நவாஸ் ஷெரீப்பின் பாஸ்போர்ட் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காலாவதியான பின்பு, அதனை புதுப்பிக்க அப்போது ஆட்சியில் இருந்த இம்ரான் கான் அரசு மறுத்து விட்டது.
தற்போது நவாஸ் ஷெரீப்புக்கு புதிய பாஸ்போர்ட்டை ஷபாஸ் ஷெரீப் அரசு வழங்கியது. இதையடுத்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அமைச்சர் ஜாவேத் லத்தீப் கூறும்போது, "பாகிஸ்தான் அரசியலில் நவாஸ் ஷெரீப் இல்லாமல் ஒரு சமநிலை சாத்தியமற்றது. அவர் நாடு திரும்ப வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவர் நாடு திரும்பியதும் மீண்டும் சிறைக்கு செல்ல பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நாவஸ்) கட்சி அனுமதிக்காது.
பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில், பொதுத்தேர்தலுக்கு முன்னதாக நவாஸ் ஷெரீப் நாடு திரும்புவார். இம்ரான்கானை எதிர்த்து நிற்க அவர் அவசியம் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் கூறும்போது, "எனது தந்தை நாடு திரும்ப விரும்புகிறேன். ஆனால் அவர் திரும்புவதற்கு சில சிக்கல்கள் தடையாக உள்ளது" என்றார்.
இதற்கிடையே நவாஸ் ஷெரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை நீக்க உதவும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டு வர ஷபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார்.
இதன் மூலம் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புவதற்காக நடவடிக்கை மும்முரமாக நடந்து வருகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அல்-அஜிசியா ஊழல் வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவர் தனது உடல்நிலையை காரணமாக வைத்து ஜாமீன் கேட்டார். அதனால், கடந்த மார்ச் மாதம், அவருக்கு 6 வார கால ஜாமீன் அளிக்கப்பட்டது.
6 வார காலம் முடிந்தவுடன், கடந்த 7-ந் தேதி அவர் மீண்டும் சிறைக்கு சென்றார். இந்நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி, தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி நவாஸ் ஷெரீப் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பதற்றமும், மனஅழுத்தமும் நவாஸ் ஷெரீப்பின் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 26-ந்தேதி முதல் 6 வாரத்துக்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் தனக்கு நிரந்தர ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதற்கிடையே அவரது ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே அவர் கோட் லக்பத் சிறைக்கு மீண்டும் திரும்பினார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு (வயது 69), அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். இருதய நோய், நீரிழிவு நோயால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர்.
இதனை சுட்டிக்காட்டி நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நவாஸ் ஷெரீப்புக்கு 6 வாரங்கள் ஜாமீன் வழங்கினர். பாகிஸ்தானுக்குள் எந்த பகுதியிலும் மருத்துவ சிகிச்சை பெறலாம், ஆனால், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சில தொண்டர்கள் நவாஸ் ஷெரீப்பின் கார் அவரது இல்லத்தை அடையும் வரை பின்தொடர்ந்து சென்றனர். வீட்டில் குடும்பத்தினர் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் நவாஸை வரவேற்றனர். அவர் விரைவில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #NawazSharif #NawazBail #PMLNLeader
பாகிஸ்தான் முன்னாள பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவருக்கு சிறைக்குள்ளேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து, உடல்நிலையை காரணம் காட்டி நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர்.