என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shehbaz sharif"

    • தற்போது காசா போர் மிக குறைந்த அளவிலேயே நடந்துவருகிறது.
    • ஜனநாயக கட்சியினர் ட்ரம்ப் உரையில் குறுக்கிட்டனர்

    இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தாவிட்டால், 35 மில்லியன் மக்கள் இறந்திருப்பார்கள் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

    நேற்று 100 நிமிடங்களுக்கு மேல் ஆற்றிய யூனியன் உரையில், மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் போரை அவர் நிறுத்தியாக தெரிவித்தார்.

    "நான் பதவியேற்ற முதல் 10 மாதங்களில், எட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்... இதில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மோதலும் அடங்கும், அது ஒருவேளை அணு ஆயுதப் போராகக்கூட மாறியிருக்கக்கூடும். எனது தலையீடு மட்டும் இல்லையென்றால், 3.5 கோடி (35 மில்லியன்) மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.' என தெரிவித்தார்.  


    100வது முறை...

    கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தியா-பாகிஸ்தான் போரை தான்தான் முடிவுக்கு கொண்டுவந்ததாக ட்ரம்ப் தெரிவித்து வருகிறார். தற்போது வரை சுமார் 100 முறை இதே கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் ட்ரம்பின் இந்தக் கூற்றுக்கு இந்தியா தொடர்ந்து மறுப்புதெரிவித்து வருகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் போர் மட்டுமின்றி, கம்போடியா - தாய்லாந்து, கொசோவோ -செர்பியா, இஸ்ரேல் - ஈரான், எகிப்து - எத்தியோப்பியா, ஆர்மீனியா - அஜர்பைஜான், காங்கோ - ருவாண்டா, மற்றும் காசா போர் ஆகியவற்றையும் நிறுத்தியதாக கூறினார். தற்போது காசா போர் மிக குறைந்த அளவிலேயே நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.

    ஒரு கட்டத்தில், சில ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்பின் உரையில் குறுக்கிட்டனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர், 'இது வேடிக்கையாக இல்லையா? இவர்கள் நோயுற்ற (மனநிலை பாதிக்கப்பட்ட) மனிதர்கள்' என்று கூறினார்

    • பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பிப்ரவரி 18 அன்று அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • நவ காலனித்துவம் என மனித உரிமை அமைப்புகள் சாடி வருகின்றன.

    காசா அமைதி வாரியத்தின் தொடக்க கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளார்.

    பாகிஸ்தானைத் தவிர, எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 முஸ்லிம் நாடுகள் வாஷிங்டனில் பிப்ரவரி 19 அன்று நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

    பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிப்ரவரி 18 அன்று அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    காசாவின் மறுசீரமைப்பு, போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல் மற்றும் காசாவின் எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பு குறித்து இதில் விவாதிக்கப்படும்.

    கடந்த மாதம் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக இந்த வாரியத்தில் இணைந்தது.

    இதற்கிடையே கசாவை மேற்பார்வையிட டிரம்ப் தலைமையில் ஒரு வாரியம் அமைக்கப்படுவது, நவ காலனித்துவம் என மனித உரிமை அமைப்புகள் சாடி வருகின்றன.  

    முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற ஷெபாஸ் ஷெரீப் அதிபர் டிரம்ப் உடன் வெள்ளை மாளிகையில் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • காஷ்மீர் பாகிஸ்தானின் முக்கிய உயிர்நாடி- பாகிஸ்தான் பிரதமர்.
    • அவர்களால் ஏற்கனவே இருப்பவர்களையே சமாளிக்க முடியவில்லை- உமர் அப்துல்லா.

    காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் "காஷ்மீர் பாகிஸ்தானின் முக்கிய உயிர்நாடி. அது ஒரு நாள் தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக மாறும்" என்று கூறியிருந்தார்.

    இதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா "நாம் அவர்களுடன் சேரப் போகிறோமா? அவர்களால் ஏற்கனவே இருப்பவர்களையே சமாளிக்க முடியவில்லை. நம்மை வைத்துக்கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்?" என பதிலடி கொடுத்துள்ளார்.

    பாகிஸ்தானால் காஷ்மீர் ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் பேசும்போது மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

    இந்திய தலைவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இந்தியா அதை திரும்ப பெறும் எனத் தெரிவித்து வருகிறார்கள்.

    • விளையாட்டில் அரசியல் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
    • நாங்கள் வங்க தேசத்துக்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும்.

    இஸ்லாமாபாத்:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியின் கொல்கத்தா அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதை தொடர்ந்து வங்கதேச அணி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகியது. தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நிராகரித்தது. வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெற்றது.

    இந்த விவகாரத்தில் வங்கதேசத்திற்கு ஏற்கனவே பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது. அதே நேரத்தில் 20 ஓவர் உலகக் கோப்பையில் ஆடுவோம் என்றும் தெரிவித்தது.

    இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்தது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

    புறக்கணிப்பு முடிவை கைவிடாவிட்டால் ஒளிபரப்பு நிறுவனம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று ஐ.சி.சி. மீண்டும் எச்சரித்தது.

    இந்தியாவுடன் விளையாட மறுப்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) இதுவரை அதிகாரப்பூர்வமாக தங்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் ஐ.சி.சி. தெரிவித்தது.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான புறக்கணிப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் மந்திரி சபை கூட்டத்தில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-

    20 ஓவர் உலகக் கோப்பை தொடர்பாக நாங்கள் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இது விளையாட்டு களம் அரசியல் இருக்க கூடாது என்பதால் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம்.

    விளையாட்டில் அரசியல் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் வங்க தேசத்துக்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும். இது மிகவும் பொருத்தமான முடிவு என்று நான் நினைக்கிறேன். நாங்கள் நன்கு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.

    இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறினார்.

    ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோஷின் நக்வி வங்கதேச விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.

    உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற 15-ந்தேதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தப்போட்டி நடக்காமல் போனால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒருவர் கடன் பெற செல்லும்போது, மற்றவரிடம் தலை குனிந்து நிற்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.
    • நானும் ஆசிம் முனீரும் நிதி பெறுவதற்காக உலக நாடுகளுக்கு செல்வதை நாங்கள் அவமானமாக கருதுகிறோம்.

    பாகிஸ்தான் நிதி நெருக்கடியால் கடும் சிக்கலை சந்தித்து வருகிறது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து நிதி கேட்கின்றனர். மற்ற நாடுகளிடம் நிதி கேட்டு நிற்பதை அவமானமாக கருதுகிறொம் என ஷெபாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் இஸ்லாமாபாத்தில் ஏற்றுமதியாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:-

    தற்போதைய நிலையில் அந்நியச் செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. எனினும், நமது நண்பர்கள் மற்றும் உலக நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட கடன்களும் இதில் அடங்கும். ஆனால், ஒருவர் கடன் பெற செல்லும்போது, மற்றவரிடம் தலை குனிந்து நிற்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்.

    நானும் ஆசிம் முனீரும் நிதி பெறுவதற்காக உலக நாடுகளுக்கு செல்வதை நாங்கள் அவமானமாக கருதுகிறொம். கடன் வாங்குவது நமது சுயமரியாதைக்கு ஒரு பெரும் சுமையாகும். வெட்கத்தால் எங்கள் தலைகள் குனிகின்றன. அவர்கள் செய்யச் சொல்லும் பல விஷயங்களுக்கு எங்களால் மறுப்புத் தெரிவிக்க முடிவதில்லை.

    இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

    • டொனால்டு டிரம்ப் 60 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    • அமைதி குழுவிற்கு டிரம்ப் தலைமை வகிப்பார்.

    அமெரிக்காவின் முயற்சியால் காசா (ஹமாஸ்)- இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஹமாஸ் பிணைக்கைதிகளை விடுவித்தது. அதற்குப் பதிலாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

    இந்தநிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக ஆலோசனை நடத்த ஒரு குழுவை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அமைத்துள்ளார். இந்த குழுவில் இடம் பெற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்பிற்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இதை பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    காசாவின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக சர்வதேச முயற்சிகளுடன் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபடும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    துருக்கி, எகிப்து, அர்ஜென்டினா, இந்தோனேசியா, இத்தாலி, மொராக்கோ, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட சுமார் 60 நாடுகளின் தலைவர்களை இந்த அமைதி அமைப்பில் சேருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

    • ராணுவத் தளபதியும், முப்படைகளின் தலைவருமான அசிம் முனீர் அதிபர் சுபியான்டோவைச் சந்திக்கவுள்ளார்.
    • பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

    இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோ 2 நாள் பயணமாக இன்றுபாகிஸ்தான் சென்றுள்ளார்.

    நூர் கான் விமான தளத்தில் வந்திறங்கிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவை பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் வரவேற்றனர். பிரபோவோவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதிபர் சுபியான்டோவுடன் முக்கிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவும் வருகை தந்துள்ளது.

    பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் அதிபர் பிரபோவோ சுபியான்டோ பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

    இதனிடையே, ராணுவத் தளபதியும், முப்படைகளின் தலைவருமான அசிம் முனீர் அதிபர் சுபியான்டோவைச் சந்திக்கவுள்ளார்.

    இந்தப் பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு அப்போதைய இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ பாகிஸ்தானுக்கு வருகை தந்திருந்தார். கடந்த ஜூலை மாதம், இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சரும் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்து பாதுகாப்புதுறையில் உற்பத்தி குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார்.  

    • தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.
    • பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.

    குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார். முதலில் நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்றார். தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.

    குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம் என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவு செயலாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா, பாகிஸ்தான் தலைமையின் ஆதாரமற்ற மற்றும் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

    தங்கள் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் இராணுவத்தின் தூண்டுதலால் நிகழும் அரசியலமைப்புச் சட்ட மீறல் மற்றும் அதிகாரக் கைப்பற்றலில் இருந்து சொந்த மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராகப் பொய்யான கதைகளை உருவாக்க முனைகிறது. இது பாகிஸ்தானின் எதிர்பார்க்கப்பட்ட தந்திரமாகும்.

    சர்வதேச சமூகம் உண்மையை நன்கு அறிந்துள்ளது. பாகிஸ்தானின் கவனத்தைத் திசை திருப்பும் சூழ்ச்சிகளால் யாரும் ஏமாற மாட்டர்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.
    • குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார்.

    பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று மதியம் 12.39 மணிக்கு நடந்த தற்கொலை தாக்குதல் குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர்.

    குண்டுவெடிப்புக்கு முன்பு தாக்குதல் நடத்தியவர் சுமார் 12 நிமிடங்கள் நீதிமன்றத்திற்கு வெளியே இருந்தார். முதலில் நீதிமன்றத்திற்குள் நுழைய முயன்றார். தோல்வியடைந்தபோது, அவர் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார் என்று தெரியவந்துள்ளது.

    இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் தான் காரணம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம் சாட்டியுள்ளார்.

    குண்டுவெடிப்புக்கு இந்திய அரசுதான் காரணம் என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை நாங்கள் போரைத் தொடருவோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

    பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தத் தாக்குதலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தாலிபான், மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான் பிரதிநிதிகள் இந்திய ஆதரவுடன் நடத்தினர் என்று தெரிவித்தார். 

    • இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.
    • ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.

    மே 7 ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் நேற்று அஜர்பைஜான் நாட்டு தலைநகர் பாகுவில் நடைபெற்ற அணிவகுப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணிச்சலான மற்றும் தீர்க்கமான தலைமையுடன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு தெற்காசியாவில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" என்றார்.

    முன்னதாக வர்த்தகத்தை நிறுத்துவேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 முறைக்கும் மேல் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. 

    • பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து 'சரிதானே? என டிரம்ப் கேட்டார்.
    • இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய நண்பர் அங்கே உச்சப் பதவியில் இருக்கிறார்

    அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    காசா அமைதி ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் பேசிய டிரம்ப், "பாகிஸ்தானும் இந்தியாவும் ஒன்றாக வாழ்வார்கள் என நம்புகிறேன்" என கூறிவிட்டு, பின்புறம் இருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை பார்த்து 'சரிதானே? என கேட்டார்.

    இதனை தொடர்ந்து பேசிய டிரம்ப், "இந்தியா ஒரு சிறந்த நாடு, என்னுடைய நண்பர் அங்கே உச்சப் பதவியில் இருக்கிறார். அவர் அற்புதமான வேலைகளை செய்கிறார்" என்று தெரிவித்தார்.

    • அமைதியின் நாயகன் (man of peace) என்று டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டினார்.
    • டிரம்ப் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார்

    அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    காசா அமைதி ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை மீண்டும் நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்கிறேன். டிரம்ப் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியுள்ளார். காஸாவில் தற்போது அமைதியை கொண்டு வந்ததன் மூலம் மத்திய கிழக்கில் லட்சக்கணக்கான உயிர்களை அவர் காப்பாற்றியுள்ளார்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமைதியின் நாயகன் (man of peace) என்று டிரம்பை பாகிஸ்தான் பிரதமர் பாராட்டும்போது இத்தாலி பிரதமர் மெலோனி தனது வாயில் கையை வைத்து கொடுத்த ரியாக்சன் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ×