என் மலர்tooltip icon

    உலகம்

    டிரம்பின் துணிச்சலான தலைமையால் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது - பாகிஸ்தான் பிரதமர் புகழாரம்
    X

    டிரம்பின் துணிச்சலான தலைமையால் இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது - பாகிஸ்தான் பிரதமர் புகழாரம்

    • இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.
    • ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்த்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.

    மே 7 ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான்கு நாள் நீண்ட எல்லை மோதல் மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் நேற்று அஜர்பைஜான் நாட்டு தலைநகர் பாகுவில் நடைபெற்ற அணிவகுப்பில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் துணிச்சலான மற்றும் தீர்க்கமான தலைமையுடன், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டு தெற்காசியாவில் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய போர் தவிர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன" என்றார்.

    முன்னதாக வர்த்தகத்தை நிறுத்துவேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 முறைக்கும் மேல் கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

    Next Story
    ×