மீண்டும் அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர்.. காரணம் இதுதான்

பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பிப்ரவரி 18 அன்று அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நவ காலனித்துவம் என மனித உரிமை அமைப்புகள் சாடி வருகின்றன.
மீண்டும் அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர்.. காரணம் இதுதான்
Published on

காசா அமைதி வாரியத்தின் தொடக்க கூட்டத்தில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ளார்.

பாகிஸ்தானைத் தவிர, எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 முஸ்லிம் நாடுகள் வாஷிங்டனில் பிப்ரவரி 19 அன்று நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன.

பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிப்ரவரி 18 அன்று அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

காசாவின் மறுசீரமைப்பு, போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல் மற்றும் காசாவின் எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பு குறித்து இதில் விவாதிக்கப்படும்.

கடந்த மாதம் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக இந்த வாரியத்தில் இணைந்தது.

இதற்கிடையே கசாவை மேற்பார்வையிட டிரம்ப் தலைமையில் ஒரு வாரியம் அமைக்கப்படுவது, நவ காலனித்துவம் என மனித உரிமை அமைப்புகள் சாடி வருகின்றன.  

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்ற ஷெபாஸ் ஷெரீப் அதிபர் டிரம்ப் உடன் வெள்ளை மாளிகையில் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com