search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former South Korean President"

    தென்கொரிய முன்னாள் அதிபர் லீ மயுங்-பாக் மீதான லஞ்ச ஊழல் வழக்கில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #SouthKoreanLeader #LeeMyungBak
    சியோல்:

    தென்கொரியாவில் லீ மயுங்-பாக் அதிபராக இருந்தபோது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சியோல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. லீ மயுங்-பாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானதால் லீ மயுங்-பாக்கிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதுதவிர 13 பில்லியன் வொன் (தென்கொரிய பணம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.



    அரசியல் நோக்கங்களுக்காக தன் மீது லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டதாக லீ தெரிவித்தார். அவருக்கு லஞ்சம் எதுவும் கொடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்ட சாம்சங் கம்பெனியும் கூறியுள்ளது.

    தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெறும் 4-வது முன்னாள் தலைவர் லீ என்பது குறிப்பிடத்தக்கது. #SouthKoreanLeader #LeeMyungBak
    ×