என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது - டிரம்ப் பாராட்டு
    X

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது - டிரம்ப் பாராட்டு

    • பூசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • ஜி ஜின்பிங்குடன் நான் கச்சா எண்ணெய் பற்றி விவாதிக்கவில்லை.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

    இந்த நிகழ்வில் ஒரு பகுதியாக பூசான் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம் தொடர்பான சாதகமான முடிவுகள் எட்டப்பட்டன. சீனா மீதான வரியை 57%லிருந்து 47%ஆக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

    இந்த சந்திபின் பின் வாஷிங்டன் புறப்பட்ட டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, சீனா நீண்ட காலமாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருகிறது. அது சீனாவின் பெரும்பான்மையான தேவையை பூர்த்தி செய்கிறது.

    அதே சமயம், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.

    ஜி ஜின்பிங்குடன் நான் கச்சா எண்ணெய் பற்றி விவாதிக்கவில்லை. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒன்றாக இணைந்து செயல்படுவது பற்றி விவாதித்தோம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்திய பொருட்கள் மீது அபராதமாக டிரம்ப் 50 சதவீத வரிவிதித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×