search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Knife stab"

    • கணவனை கத்தியால் மனைவி குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
    • அதிகாலை 1.30 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் கிரணை, கத்தியால் குத்தியுள்ளார் மனைவி

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திருமண நாளுக்கு பரிசு தராத கணவனை கத்தியால் மனைவி குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    பெங்களுருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிரண். இவரது மனைவி சந்தியா (வயது35). சமீபத்தில் இவர்களுக்கு திருமண நாள் வந்துள்ளது. அந்நாளில், மனைவிக்கு கிரண் பரிசு வாங்கித் தரவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சந்தியா, கணவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

    மேலும் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே சண்டையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன் கிரண் தூங்க சென்றார். அதிகாலை 1.30 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த கணவன் கிரணை, கத்தியால் ஆத்திரத்தில் குத்தியுள்ளார் மனைவி சந்தியா.

    இதனால் ரத்த வெள்ளத்தில் அலறிய கணவன் கிரணை அக்கம் பக்கத்தினர் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

    கிரணின் தாத்தா சம்பவ தினத்துக்கு முந்தைய நாள்தான் இறந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனால், மனைவிக்கு மணநாள் பரிசு வாங்கித் தரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கணவனை கத்தியால் குத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர் .மேலும் அவருக்கு மனநல சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.

    • முன் விரோதம் காரணமாக விபரீதம்
    • சிறையில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அனீஸ் நகரை சேர்ந்தவர் ரயீஸ் அகமது (வயது 30).

    இவருக்கும் புதுமனையை சேர்ந்த அருணாசலம் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு இவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்ப டுகிறது.

    ஆத்திர மடைந்த அருணாச லம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரயீஸ் அகமதுவை குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அருணாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இட பிரச்சினை காரணமாக முன்விேராதம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிளைவ் பஜார் பகு தியைச் சேர்ந்தவர்கள் நவீன் (வயது 26), ராஜேஷ் (42), சாமு வேல் (42). இவர்களுக்குள் இடம் பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாமுவேல், நவீன், ராஜேஷ் ஆகியோருக்குள் தகராறு ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் தகராறு முற்றி சாமுவேல் கத்தியால் நவீன், ராஜேஷ் ஆகிய இருவரையும் குத்தி உள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த இருவரும் மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து சாமுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த கரடிகுடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40), கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி கலையரசி (31) என்ற மனைவியும், 3 மகன்கள் உள்ளனர்.

    மதுப்பழக்கத்திற்கு அடிமையான சரவணன் தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம்.

    அதன்படி சரவணன் நேற்று இரவு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்- மனைவியிடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சரவணன், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கலையரசி மார்பில் குத்தினார்.

    வலி தாங்க முடியாமல் கலையரசி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயம் அடைந்த கலையரசியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தூத்துக்குடி தாளமுத்து நகர் கோவில்பிள்ளை விளையை சேர்ந்தவர் பிரவீன் குமாருக்கும், அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
    • மதன்குமார், செல்வம் ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீன் குமார் தலையில் சரமாரியாக வெட்டினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் கோவில்பிள்ளை விளையை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது21). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் முன் விரோதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பிரவீன்குமார் மீதும் வழக்குகள் போலீஸ் நிலையங்களில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோவில்பிள்ளை விலையில் இருந்து அருகில் உள்ள வேலாயுதபுரத்தில் வசித்து வருகின்றார்.

    கத்திக்குத்து

    இந்நிலையில் நேற்று மாலை கிருஷ்ணராஜபுரம் சேதுபாதைரோடு, நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பிரவீன் குமார் வரும்போது, மற்றொரு வாகனத்தில் வந்த கோவில் பிள்ளை விளையைச் சேர்ந்த மதன்குமார்(25), செல்வம் (26) ஆகிய இருவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரவீன் குமார் தலையில் சரமாரியாக வெட்டினர்.

    இதில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிரவீன்குமார் கீழே விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    2 பேர் கைது

    இது குறித்து வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜ், ரத்தினவேல் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மதன்குமார், செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மதன்குமார் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கங்களுடன் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் பெயர் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • லாரி டிரைவர் கைது
    • முன் விரோதம் காரணமாக விபரீதம்

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த பிரம்ம தேசத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). பிரியாணி மாஸ்டர். இவரது மனைவி மாயாதேவி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி (28).லாரி டிரைவர். இவருக்கும் பெருமாளுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. பெருமாளின் மனைவி பிரிந்து சென்றதற்கு வீராசாமி தான் காரணம் என்று கூறி இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை வீராசாமி பஜார் வீதியில் நின்றிருந்த பெருமாளிடம் சென்று தகராறில் ஈடுபட்டார். பின்னர் இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த வீராசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெருமாளை சரமாரியாக குத்தினார். இதனால் பஜார் வீதியில் நின்று இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த பெருமாளை அங்கிரு ந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்து வமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பிரம்ம தேசம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தார்.

    மேலும் வீராசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நில அளவையர் மீது வழக்கு
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருள். இவர் நெமிலியில் நில அளவையராக பணி செய்து வருகிறார்.

    நேற்று காலை இவருக்கும் எதிர் வீட்டில் இருக்கும் கருணாகரன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கருணாகரனை, அருள் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் பலத்த காயம் அடைந்த கருணாகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும், இது குறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் அருள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    இந்த தகராறை அங்கு இருந்தவர்கள் செல்போன் வீடியோ மூலம் பதிவு செய்துள்ளனர். இதனை சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர். தற்போது வீடியோ வைரலாகி வருகிறது.

    • நிலத்தகராறில் பயங்கரம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த மராட் டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் நாயுடு. இவரது மகன்கள் தட்சணா மூர்த்தி (வயது 49), சுந்தர மூர்த்தி, சரவணன் (41). அண்ணன் - தம்பிகளான இவர்களுக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் சுமார் 3 ஏக்கர் 88 சென்ட் விவசாய நிலம் உள்ளது.

    இந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் இவர்கள் 3 பேருக்கும் இடையே பிரச்சினை வந்ததால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் ஊர் பெரியவர் கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் வழக்கை வாபஸ் பெறுவதாக தட்சணா மூர்த்தி தெரிவித்தார். அதன் படி வழக்கை வாபஸ் பெற் றார்.இந்த நிலையில் தட்ச ணாமூர்த்தி நேற்று காலை அவருக்குரிய இடத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்து கொண்டு இருந்தார். அப் போது அங்கு வந்த தட்சணா மூர்த்தியின் கடைசி தம்பி சரவணன், கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது ஏன் ஏர் ஓட்டுகிறாய் என்று கேட் டுள்ளார்.

    இதனால் தட்சணாமூர்த் திக்கும் சரவணனுக்கும் தக ராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த சரவணன் நிலத்தில் இருந்த கல்லால் தட்சணா மூர்த்தியை தாக்கியுள்ளார். இதைப்பார்த்த அவரது தம்பி

    சுந்தரமூர்த்தி, அண்ணனை இப்படி கல்லால் அடித்து இருக்கின்றாயே என்று கேட் டுள்ளார். அதற்கு சரவணன் ஒன்று சேர்ந்து என் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கி றாய் என்று கூறி மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தர மூர்த்தியை சரமாரியாக குத்தி உள்ளார். படுகாயம் அடைந்தநிலையிலும் தடுக்க வந்த தட்சணாமூர்த்தியையும் கத்தியால் குத்திய சரவணன்தப்பி சென்று விட்டார். நிலைகுலைந்து மயங்கி விழுந்த தட்சணாமூர்த்தி மற் றும் சுந்தரமூர்த்தியை அரு கில் இருந்தவர்கள் மீட்டு ஒடு கத்தூர் அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் சிகிச்சைக் காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல் லப்பட்டனர். இது குறித்து சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏரியில் மீன் பிடித்ததால் ஆத்திரம்
    • 4 பேரிடம் போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனுார் கிராமம் புக்கா வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் பாண்டியன் (வயது25) இவர் பெங்களூரில் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.

    2 நாட்களுக்கு முன் ஜோலார்பேட்டைக்கு வந்த அவர் நேற்று முன்தினம் சின்ன மூக்கனுார் ஏரி ஏரியில் மீன் பிடித்து கொண்டு இருந்தார்.

    அப்போது திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை நாராயணபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 45) மற்றும் சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்த நாகேஷ், முருகன், மற்றும் அன்பழகன் மனைவி விஜயா ஆகியோர் சேர்ந்து பாண்டியன் ஏரியில் மீன் பிடித்தது பார்த்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர்.

    இதில் நிலை குலைந்து மயங்கி விழுந்த பாண்டியனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்துார் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து பாண்டியன் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் பாண்டியனை தாக்கியதாக ஆனந்தன், அவரது சகோதரி விஜயா உறவினர்கள் நாகேஷ், முருகன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகமாக பைக்கை ஓட்டி வந்ததை தட்டி கேட்டதால் ஆத்திரம்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் வாணியம்பாடி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு இவரது மகன் விஜயபாபு (வயது 27) இவர் நேதாஜி ரோடு கட்டேரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது சக்கரகுப்பம் பகுதியைச் சேர்ந்த காந்தி ராஜான் என்பவர் தனது பைக்கில் வேகமாக ஓட்டி வந்தார்.

    இதைபார்த்த விஜயபாபு ஏன் இவ்வளவு வேகமாக பைக்கை ஓட்டி வருகிறாய் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காந்திராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது விஜயபாவுக்கு ஆதரவாக நண்பர் இளையராஜா ஏன் இவ்வளவு வேகமா ஓட்டி வந்தாய் எனக் கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த காந்தி ராஜன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் 2 பேரையும் குத்தினார். இதில் விஜயபாபு தலைமீதும் இளையராஜா கைமீதும் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த விஜயபாபு இளையராஜா ஆகியோர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து விஜயபாபு கொடுத்த புகாரின்பேரில் ஜோலார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அரசு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காந்திராஜனை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • முன்விரோதத்தால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் பஸ் நிலையத்தின் அருகில் உள்ள கட்டைமேடு பகுதியை சேர்ந்த ராம்கி வயது (33) ஆட்டோ டிரைவர்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாரத் (34) ஆட்டோ டிரைவர் ஆகிய 2 பேருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர்.

    அப்போது ராம்கி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாரத் மீது சரமாரியாக தாக்கி உள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்தார் இவரை மற்ற ஆட்டோ டிரைவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பாரத் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் ராம்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பஸ்சில் வந்தார்.
    • போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் (வயது 34). பெயிண்டர்.

    சம்பவத்தன்று இவர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பஸ்சில் வந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவர் செல்வத்திடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். பஸ் ராமநாதபுரம் சிந்தாமணி பஸ் நிறுத்தம் வந்ததும் செல்வம் பஸ்சை விட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்போது அவரை மணிகண்டன் பின் தொடர்ந்து சென்றார். திடீரென அவர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மிரட்டி பணம் கொடுக்கும்படி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த குண்டு மணிகண்டன் தான் வைத்து இருந்த கத்தியால் செல்வத்தை குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள குண்டு மணிகண்டனை தேடி வருகிறார்கள்.

    இவர் மீது ஏற்கனவே கோவை மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

    ×