என் மலர்
நீங்கள் தேடியது "posco law arrested"
கோவை:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சுப்பன் (வயது 77). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் முதியவர் சுப்பனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த சுப்பனுக்கு கடந்த 4-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கைதிகளுக்கான சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் இரவு இறந்து விட்டார்.
குடியாத்தம்:
கே.வி.குப்பம் அடுத்த பசுமாத்துர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி குடியாத்தம் அரசு மகளிர் மேல் நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் 15 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பவில்லை. தன் மகளை கண்டுபிடித்து தருமாறு மாணவியின் தந்தை கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் 17 நாட்களுக்கு பிறகு மாணவியை சென்னையில் மீட்டு கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாணவியை கடத்தியது அதே பகுதியைச் சேர்ந்த ஹிட்லர் என்பவரின் மகன் ராஜசேகர் என்பது தெரியவந்தது. இவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ராஜசேகரை கைது செய்தனர்.






