search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man death"

    • அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கருப்பனை தாக்கி தூக்கி வீசியது.
    • உடனடியாக முள்ளங்காடு, நரசிபுரம் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கோவை:

    கோவை ஆலந்துறை செம்மேடு அருகே உள்ள பட்டியார் கோவில்பதியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 73). கூலித் தொழிலாளி. இவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கழிப்பறை செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒற்றை காட்டு யானை கருப்பனை தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றனர். பின்னர் யானையை காட்டுக்குள் விரட்டினர். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக முள்ளங்காடு, நரசிபுரம் வனப்பணியாளர்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்து மயங்கிய நிலையில் இருந்த கருப்பனை ஆம்புலன்சு மூலமாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டேங்கர் லாரியின் முன் புறத்தில் மோதி லோடு வேன் சாலை யின் ஓரமாக கவிழ்ந்தது.
    • இதில் லோடு வேனில் பின்புறமாக பயணம் செய்த கோபாலசமுத்திரம் அகதிகள் முகாமை சேர்ந்த செல்வராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ராசா சேவியர் மகன் மில்டன். இவர் நேற்று இரவு தூத்துக்குடியில் இருந்து தனது லோடு வேனில் மீன் ஏற்றிக் கொண்டு நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    டேங்கர் லாரி மோதி விபத்து

    இரவு 11 மணிக்கு வல்ல நாடு துப்பாக்கி சுடுதளம் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த கியாஸ் டேங்கர் லாரியை முந்தி இடது புறமாக திருப்பி உள்ளார். அப்போது டேங்கர் லாரியின் முன் புறத்தில் மோதி லோடு வேன் சாலை யின் ஓரமாக கவிழ்ந்தது.

    இதில் லோடு வேனில் பின்புறமாக பயணம் செய்த கோபாலசமுத்திரம் அகதி கள் முகாமை சேர்ந்த செல்வராஜ் (வயது 62) என்பவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேலும் நெல்லை மாவட்டம் சிங்கம் பாறை சேர்ந்த ஆரோக்கிய ரூபன், இலந்தைகுளத்தை சேர்ந்த வர்கீஸ், திருவேங்கட நாதபுரம் பாலாஜி நகரை சேர்ந்த சந்திரன், திருவேங்கட நாதபுரத்தை சேர்ந்த பெரியதுரை ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்த னர்.

    தீவிர சிகிச்சை

    இது குறித்து தகவல் அறிந்தவுடன் முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டேங்கர் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த சண்முகம் என்ப வரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உசிலம்பட்டியில் இருந்து அல்லிநகரத்துக்கு வந்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
    • அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள வி.காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சங்கன் (வயது 70). இவர் உசிலம்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி விட்டு அல்லிநகரத்துக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

    இது குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 55).
    • இவர் இன்று காலை புலவன்குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 55). இவர் இன்று காலை புலவன்குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள சர்ச் அருகே சென்றபோது, எதிரோ வந்த மினி லோடு வேன் அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட தர்மராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதேநேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த மினி லோடு வேன் அப்பகுதயில் இருந்த தரைபாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் லோடு வேன் டிரைவரான வீரவநல்லூர் தம்பிரான் காலனியை சேர்ந்த காசிதுரை என்பவரது மகன் பிரவீனுக்கும்(20) வாய் கிழிந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பத்தமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, இறந்த தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காயம் அடைந்த பிரவீனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே புதுப்பட்டி சடையம்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

    அணைப்பட்டிக்கு சென்று மருந்து அடித்துவிட்டு வந்தவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தை சேர்ந்தவர் கணேசன்(60). இவர் மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    சம்பவத்தன்று அணைப்பட்டிக்கு சென்று மருந்து அடித்துவிட்டு வந்தவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    • சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் கச்சேரி தெருவில் உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனோகரன்தனது மனைவி தீபாவுடன் திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர்.
    • மனோகரன் தரிசனம் முடிந்து குளிப்பதற்காக அம்மா மண்டபம் காவிரி ஆற்றின் படித்துறைக்கு வந்துள்ளனர்.

    திருச்சி :

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் மனோகரன்(62). இவர் தனது மனைவி தீபாவுடன் திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர்.

    தரிசனம் முடிந்து குளிப்பதற்காக அம்மா மண்டபம் காவிரி ஆற்றின் படித்துறைக்கு வந்துள்ளனர். மனோகரன் குளிப்பதற்காக காவிரி ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தீபா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வடக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காளையார்கோவில் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரின் மீது கார் மோதியதில் சிறுமி, முதியவர் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    காளையார்கோவில்:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள பெத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 50). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபீதா என்ற மனைவியும், நசீன் பாத்திமா (14) என்ற மகளும் உள்ளனர்.

    வெளிநாட்டில் இருந்த இஸ்மாயில் நேற்று விமானம் மூலம் ஊருக்கு புறப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவரை அழைத்து வருவதற்காக சபீதா, தனது மகள் நசீன் பாத்திமா, உறவினர் ராஜா முகமது (60) ஆகியோருடன் காரில் நேற்று இரவு திருச்சிக்கு புறப்பட்டார். காரை பரமக்குடியைச் சேர்ந்த செல்வம் (37) என்பவர் ஓட்டினார்.

    விமானத்தில் வந்து இறங்கிய இஸ்மாயிலை அழைத்துக் கொண்டு இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் ஊருக்கு காரில் புறப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தை அடுத்துள்ள புல்லுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

    இதில் கார் நொறுங்கியது. உள்ளே இருந்தவர்கள் படுகாயம் அடைந்து கூக்குரலிட்டனர். இந் விபத்தில் நசீன் பாத்திமா, ராஜா முகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இஸ்மாயில், சபீதா, டிரைவர் செல்வம் ஆகியோரை அந்தப் பகுதி மக்கள் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓமலூர் அருகே ஒட்டு போட்ட முதியவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேட்டுப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 74). இவர் இன்று காலை அங்குள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

    பின்னர் வெளியில் வந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டனர்.

    ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    வால்பாறையில் 500 அடி பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வால்பாறை:

    வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவர் பெரியசாமி(65). இவர் ரொட்டிக்கடை பகுதியில் அமைந்துள்ள சிலுவைமேடு பகுதியில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான புற்களை கொண்டு சீமார் செய்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றார்.

    இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னால் புற்களை எடுப்பதற்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் அவரது உறவினர்கள் பெரியசாமியை ரொட்டிக்கடை, அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் தேடிப் பார்த்த போது ரொட்டிக்கடை சிலுவை மலையில் உள்ள 500 அடி பள்ளத்தில் பாறையின் மீது உருண்டு விழுந்து இறந்துகிடந்தது தெரிந்துள்ளது.

    இது குறித்து உறவினர்கள் வால்பாறை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் பெரியசாமியின் உடலைக் கைப்பற்றி வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். #tamilnews
    ஊத்தங்கரை அருகே மாங்காய் திருடியதை தட்டிக்கேட்ட முதியவர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரபேட்டை மிட்டபள்ளி அருகே உள்ள ஓபகாவலசை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 60). இவரது மனைவி மங்கம்மாள்.

    நேற்று முன்தினம் நள்ளிரவு இவர்கள் தோட்டத்தில் காவலுக்கு இருந்தனர். அப்போது 3 பேர் வந்து பக்கத்து தோட்டத்தில் மாங்காய் திருடினார்கள். உடனே வெங்கட்ராமன் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது திருடர்கள் 3 பேரும் வந்து வெங்கட்ராமனையும், அவரது மனைவியையும் தாக்கினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே வெங்கட்ராமன் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

    இந்த கொலை குறித்து ஊத்தங்கரை டி.எஸ்.பி. ராஜபாண்டி தலைமையில் சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் முதியவர் வெங்கட்ராமனை கொலை செய்த சிங்காரப்பேட்டை கணபதி நகரை சேர்ந்த வெங்கடேசன் (38), பொம்மதாசம்பட்டி கார்த்திக் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

    தலைமறைவான மல்லியம்பட்டியை சேர்ந்த மாதையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைதான கார்த்திக், வெங்கடேசன் ஆகிய 2 பேரும் ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ×