என் மலர்

  நீங்கள் தேடியது "mango theft"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊத்தங்கரை அருகே மாங்காய் திருடியதை தட்டிக்கேட்ட முதியவர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  ஊத்தங்கரை:

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரபேட்டை மிட்டபள்ளி அருகே உள்ள ஓபகாவலசை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 60). இவரது மனைவி மங்கம்மாள்.

  நேற்று முன்தினம் நள்ளிரவு இவர்கள் தோட்டத்தில் காவலுக்கு இருந்தனர். அப்போது 3 பேர் வந்து பக்கத்து தோட்டத்தில் மாங்காய் திருடினார்கள். உடனே வெங்கட்ராமன் திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது திருடர்கள் 3 பேரும் வந்து வெங்கட்ராமனையும், அவரது மனைவியையும் தாக்கினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே வெங்கட்ராமன் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

  இந்த கொலை குறித்து ஊத்தங்கரை டி.எஸ்.பி. ராஜபாண்டி தலைமையில் சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் முதியவர் வெங்கட்ராமனை கொலை செய்த சிங்காரப்பேட்டை கணபதி நகரை சேர்ந்த வெங்கடேசன் (38), பொம்மதாசம்பட்டி கார்த்திக் (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

  தலைமறைவான மல்லியம்பட்டியை சேர்ந்த மாதையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

  கைதான கார்த்திக், வெங்கடேசன் ஆகிய 2 பேரும் ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
  ×