திண்டுக்கல்: சாக்கடையில் தவறி விழுந்தவர் சாவு

சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் கச்சேரி தெருவில் உள்ள சாக்கடையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்,அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com