என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cheranmahadevi"

    • மேலச்செவல் பேரூராட்சி பகுதியில் கண்ணன் என்ற விவசாயி சமீபத்தில் நெல் அறுவடை செய்துள்ளார்.
    • கிராமத்தின் நிர்வாக அதிகாரி அடங்கல் ஆவணத்தை விரைவாக கொடுக்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததாக புகார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் மேலச்செவல் பேரூராட்சி பகுதியில் தேசமாணிக்கம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்ற விவசாயி சமீபத்தில் நெல் அறுவடை செய்துள்ளார்.

    அடங்கல் ஆவணம் தாமதம்

    அதனை அப்பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக அவருக்கு அடங்கல் ஆவணம் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அந்த கிராமத்தின் நிர்வாக அதிகாரி அடங்கல் ஆவணத்தை விரைவாக கொடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டதாகவும், அதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து விட்டதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அந்த விவசாயி கூறுகையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பே அடங்கல் வாங்குவதற்காக எங்களது வயல் பட்டாவை கொடுத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். அதன்பின்னர் வருவாய் ஆய்வாளரிடம் நான் அளித்த புகாரை அறிந்து, தற்போது அடங்கல் ஆவணம் தயார் செய்து கொடுத்துள்ளார்.

    நெல் மூட்டைகள்

    தற்போது நெல் கொள்முதல் நிலையத்தில் அடங்கல் ஆவணம் சமர்ப்பித்துள்ளேன். அவர்களது நடைமுறைகள் முடிக்க 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் எனது நெல் மூட்டைகள் முளைத்துவிட்டன. நேற்று பாதிமூட்டைகளை மட்டுமே நெல்லை கொள்முதல் செய்தனர். அதற்குள் மழை வந்து மீதமுள்ள மூட்டைகளை நனைத்துவிட்டது.

    இதனால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் காலதாமதம் ஏற்பட்டு நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.

    • பத்தமடையை அடுத்த மேல உப்பூரணி கோவில் தெருவை சேர்ந்தவர் வேதமணி, கட்டிட தொழிலாளி.
    • வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை வேதமணி குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடையை அடுத்த மேல உப்பூரணி கோவில் தெருவை சேர்ந்தவர் வேதமணி(வயது 30). கட்டிட தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று, வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை வேதமணி குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். இதுதொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே கலைஞர் திடலில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
    • பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே கலைஞர் திடலில் எனது (ஆவுடையப்பன்) தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் வரவேற்கிறார். கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கோசல், மாவட்ட துணை செயலாளர்கள் நம்பி மைக்கேல், தமயந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், மாநில அணி நிர்வாகிகள் ஆவின்ஆறுமுகம், ராஜம்ஜான், எரிக்ஜூடு, கணேஷ்குமார் ஆதித்தன், ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கண்ணன், கணேசன், அபுபக்கர், சாந்திசுபாஷ், எட்வின் வளன்அரசு, பரமசிவ அய்யப்பன், கனகராஜ், நகர செயலாளர்கள் கணேசன், சுப்பிரமனியன் என்ற மணிசூரியன், ஒன்றிய பரணி சேகர், முத்துக்கிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், கே.எஸ். தங்க பாண்டியன், செல்வ கருணாநிதி, ராஜன், சுடலைக்கண்ணு, ஆரோக்கியஎட்வின், முருகன், கணேசன், சேவியர்ராஜா, ஜோசப்பெல்சி மற்றும் பலர் கலந்து கொள்கன்றனர்.

    எனவே பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர் துணை மின்நிலைத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மேலக்கல்லூர் துணை மின்நிலைத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மேலக்கல்லூர், சேரன்மகாதேவி,சுத்தமல்லி,சங்கன்திரடு, கொண்டாநகரம்,நடுக்கல்லூர், பழவூர்,கருங்காடு,திருப்பணிகரிசல்குளம்,துலக்கர்குளம்,வெள்ளாங்குளம் ,உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேரன்மகாதேவி அருகே உள்ள பூதத்தான் குடியிருப்பு கிராமத்தில் லட்சுமி நாராயணசுவாமி கோவில் உள்ளது
    • உண்டியலை உடைத்த அவர்கள் அதில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பூதத்தான் குடியிருப்பு கிராமத்தில் லட்சுமி நாராயணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த உண்டியலை உடைத்த அவர்கள் அதில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

    இதேபோல் நேற்று நள்ளிரவில் அதே கிராமத்தில் உள்ள சுடலைமாடசுவாமி கோவில், பிள்ளையார்கோவில் உள்ளிட்ட கோவில்களின் உண்டியல்களும் உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளது. இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில்களில் திருடிய மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின்நிலைத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற் பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட கரிசல்பட்டி, சேரன்மகாதேவி துணை மின்நிலைத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கரிசல்பட்டி, பிள்ளைகுளம்,காணியாளர் குடியிருப்பு, பட்டன் காடு, இடையன்குளம்,கங்கணாங்குளம்,பத்தமடை,கோபால சமுத்திரம்,மேலச்செவல்,வாணியங்குளம், சுப்பிர மணியபுரம், சடையான்குளம், வெங்கட்ர ங்கபுரம், சிங்கிகுளம், தேவன் நல்லூர், இகாடுவெட்டி, சேரன்மகாதேவி, கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தோட்டத்தில் மேற்பார்வையாளராக அஜித்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
    • திருட்டு குறித்து அஜித்குமார் பத்தமடை போலீசில் புகார் அளித்தார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடையில் கருப்பங்குளம் பகுதியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரது தோட்டம் உள்ளது. இங்கு குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ராம் அஜித்குமார்(வயது 31) என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ந்தேதி இவர் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த 3 மின்மோட்டார்கள், தண்ணீருக்காக வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது.

    இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில் பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    • விழாவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 300 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    • சேக் அப்துல்லா,அம்பை சங்கர நாராயணன் ஆகியோர் இயற்கைவழி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.

    சேரன்மகாதேவி:

    சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் உயர்தர உள்ளுர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி விழா சேரன் மகாதேவி ஸ்காட் பொறியி யல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.

    விழாவில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 300 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் சுபசெல்வி வரவேற்று பேசினார். நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முருகா னந்தம் விழாவின் நோக்கம் குறித்து பேசினார்.

    சேரன்மகாதேவி சப்- கலெக்டர் முகம்மது ஷபீர் ஆலம் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானியங்களின் முக்கியத்துவம், பயன்பாடுகள் குறித்து தலைமையுரையாற்றி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பயனாளிகளுக்கு இடு பொருட்கள் வழங்கினார்.

    சேரன்மகாதேவி ஒன்றிய குழுத் தலைவர் பூங்கோதை குமார் மற்றும் பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன் வாழ்த்துரை வழங்கினர்.

    சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி பொது மேலாளர் தம்பிதுரை மற்றும் முதல்வர் ஜஸ்டின் திரவியம், நெல்லை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன், வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) அசோக்குமார், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய மாநில அரசு திட்டம்) ஜாய்லின் சோபியா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் பூவண்ணன், விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜாதாபாய், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்ற ளிப்புத்துறை உதவி இயக்குநர் ரெனால்டா ரமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பேராசிரி யர் மற்றும் தலைவர் ஆறுமுகசாமி, இணை பேராசிரியர்கள் ரஜினி மாலா, இளஞ்செழியன் ஆகியோர் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து தொழில்நுட்ப உரை ஆற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

    இயற்கை விவசாயி சேக் அப்துல்லா மற்றும் அம்பை சங்கர நாராயணன் ஆகியோர் இயற்கைவழி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பேசினர்.

    பாரம்பரிய பயிர்களை சந்தைப்படுத்துதல் குறித்து உள்ள விஸ்வநாதன் மற்றும் இயற்கை விவசாயி லெட்சுமி தேவி ஆகியோர் பேசினர்.

    சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார் நன்றி கூறினார்.

    இக்கண்காட்சியில் நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துவரும் பாரம்பரிய நெல் பயிர் ரகங்கள், அவற்றின் சிறப்பம்சங்கள் குறித்த பதாகைகள், சர்வதேச சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு சிறுதானிய பயிர்கள் மற்றும் விழப்புணர்வு பதாகைகளும் வைக்கப்பட்டது.

    மேலும் நெல் மற்றும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் குறித்த விற்பனை அங்காடி அமைக்கப்பட்டிருந்தது.

    விழாவிற்கான ஏற்பாடு களை நெல்லை மாவட்ட வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • வித்யா பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
    • நகையை பறித்த அந்த நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார்.

     நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாங்குளம் மேல உப்பூரணியை சேர்ந்தவர் துரைமணி. இவரது மனைவி வித்யா(வயது 38). இவர் காமராஜ்நகர் பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். நேற்று இரவு கடையில் வித்யா இருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.

    அவர்களில் ஒருவர் தலையில் ஹெல்மெட் அணிந்து வந்துள்ளார். பின்னால் அமர்ந்திருந்த நபர் பெட்டிக்கடையில் பொருட்கள் கேட்டுள்ளார். வித்யா அந்த பொருட்களை எடுத்துக்கொண்டி ருந்தபோது, அவரது கழுத்தில் கிடந்த நகையை அந்த நபர் பறித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றார்.

    இதுகுறித்து வித்யா அளித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 திருடர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஜமாத் தலைவர் அபுல்ஹசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • இப்தார் நிகழ்ச்சியில் முஸ்லிம் ஜமாத்தினர், சர்வ சமயத்தினர் கலந்துகொண்டனர்.

    சேரன்மகாதேவி:

    சேரன்மகாதேவியில் குத்பா முகைதீன் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, ஜமாத் தலைவர் அபுல்ஹசன் தலைமை தாங்கினார். செயலர் ஷேக் செய்யது அலி முன்னிலை வகித்தார். இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர் முகம்மது இஸ்ஹாக் ஹுசைன் தொடங்கி வைத்தார்.

    இதில் சிறப்பு விருந்தினராக சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் கலந்து கொண்டார். இமாம் மீரான்கனி,பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ், சேகரகுரு கிப்சன் ஜான்தாஸ், , அரிமா சங்கத்தினர் முருகேசன், அமல்ராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், முஸ்லிம் ஜமாத்தினர், சர்வ சமயத்தினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை தக்வா பள்ளிவாசல் இமாம் குலாம் முகைதீன் ஜமாலி தொகுத்து வழங்கினார். ஜமாத் துணைச் செயலர் செய்யது அப்பாஸ் வரவேற்றார். இளைஞர் நற்பணி மன்றச் செயலர் இம்தியாஸ் நன்றி கூறினார்.

    • ஷாஜகான் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார்.
    • அலங்கார விளக்குகளை அப்புறப்படுத்தும் பணியில் ஷாஜகான் ஈடுபட்டார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடை சம்பந்தர் தெருவை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 44 ). இவர் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார்.

    மின்சாரம் தாக்கி பலி

    நேற்று பத்தமடை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதற்காக அவர் ஒலிபெருக்கி மற்றும் அலங்கார விளக்குகள் பொருத்தி இருந்தார். விழா நிறைவையொட்டி இன்று காலை கோவிலில் அமைத்திருந்த அலங்கார விளக்குகளை அப்புற ப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சேரன்மகாதேவியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜகான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 55).
    • இவர் இன்று காலை புலவன்குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    நெல்லை:

    சேரன்மகாதேவி அருகே உள்ள புலவன்குடியிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 55). இவர் இன்று காலை புலவன்குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள சர்ச் அருகே சென்றபோது, எதிரோ வந்த மினி லோடு வேன் அவரது மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட தர்மராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அதேநேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த மினி லோடு வேன் அப்பகுதயில் இருந்த தரைபாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் லோடு வேன் டிரைவரான வீரவநல்லூர் தம்பிரான் காலனியை சேர்ந்த காசிதுரை என்பவரது மகன் பிரவீனுக்கும்(20) வாய் கிழிந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பத்தமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, இறந்த தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காயம் அடைந்த பிரவீனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×