search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேரன்மகாதேவியில் நாளை மாலை  அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்  -  நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை
    X

    கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன்.

    சேரன்மகாதேவியில் நாளை மாலை அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் - நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் அறிக்கை

    • நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே கலைஞர் திடலில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
    • பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டு தலின்படி நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே கலைஞர் திடலில் எனது (ஆவுடையப்பன்) தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் முன்னிலை வகிக்கின்றனர். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் வரவேற்கிறார். கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி என்ற பிரபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கோசல், மாவட்ட துணை செயலாளர்கள் நம்பி மைக்கேல், தமயந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், மாநில அணி நிர்வாகிகள் ஆவின்ஆறுமுகம், ராஜம்ஜான், எரிக்ஜூடு, கணேஷ்குமார் ஆதித்தன், ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கண்ணன், கணேசன், அபுபக்கர், சாந்திசுபாஷ், எட்வின் வளன்அரசு, பரமசிவ அய்யப்பன், கனகராஜ், நகர செயலாளர்கள் கணேசன், சுப்பிரமனியன் என்ற மணிசூரியன், ஒன்றிய பரணி சேகர், முத்துக்கிருஷ்ணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், கே.எஸ். தங்க பாண்டியன், செல்வ கருணாநிதி, ராஜன், சுடலைக்கண்ணு, ஆரோக்கியஎட்வின், முருகன், கணேசன், சேவியர்ராஜா, ஜோசப்பெல்சி மற்றும் பலர் கலந்து கொள்கன்றனர்.

    எனவே பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×