சேரன்மகாதேவி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

பத்தமடையை அடுத்த மேல உப்பூரணி கோவில் தெருவை சேர்ந்தவர் வேதமணி, கட்டிட தொழிலாளி.வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை வேதமணி குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்
சேரன்மகாதேவி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Published on

நெல்லை:

சேரன்மகாதேவி அருகே உள்ள பத்தமடையை அடுத்த மேல உப்பூரணி கோவில் தெருவை சேர்ந்தவர் வேதமணி(வயது 30). கட்டிட தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று, வயலுக்கு தெளிப்பதற்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை வேதமணி குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். உடனே அவரது உறவினர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். இதுதொடர்பாக பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com