search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Social harmony"

  • நாட்டுமக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
  • நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

  திருப்பூர் :

  திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சமூக நல்லிணக்க ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார். மாநகர இளைஞரணி துணை செயலாளர் நாசர்அலி முன்னிலை வகித்தார்.

  மாவட்ட பிரதிநிதி முகமது சைபுதீன் வரவேற்றார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன், பொருளாளர் நல்லூர் மணி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் சாந்தாமணி, 20-வது வார்டு கவுன்சிலர் குமார், மங்கலம் பகுதி ம.தி.மு.க. நிர்வாகிகள் பாபுசேட் பஷீர் அகமது, 28-வது வார்டு பிரதிநிதி அக்பர் அலி ஆகியோர் வாழ்த்து பேசினர்.

  இதில் ஜி.கே.கார்டன் பள்ளி தலைமை இமாம் ஹாஜி மவுலவி முகமது அப்துல் கனி பிரார்த்தனை செய்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாமுண்டிபுரம் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலின் தலைவர் நாசர், பொருளாளர் முகம்மது இஸ்மாயில், செயலாளர் ஹிதாயத்துல்லா, முத்தவல்லி ஜமாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  முன்னதாக சமூக ஒற்றுமை வேண்டியும், நாட்டுமக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மும்மதத்தினரும் சமூக நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

  முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டின் பேரில் நலஉதவிகள் வழங்கப்பட்டது. இதில் ம.தி.மு.க. பகுதி செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, ஆனந்தகுமார், தளபதி பிரபு, செந்தில்குமார், நல்லூர் ராஜு, மாநகர துணை செயலாளர் பூபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • ராமநாதபுரத்தில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
  • முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.

  ராமநாதபுரம்

  ராமநாதபுரத்தில் த.மு.மு.க, ம.ம.க. சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது. த.மு.மு.க மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான் தலைமை தாங்கினார். இதில் ஹூசைன் ஆலிம் சிறப்புரையாற்றினார். அவைத்தலைவர் சைபுதீன், ராமநாதபுரம் நகரசபைத்தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணைத்தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், நகர்மன்ற உறுப்பினர் காதர் பிச்சை, ஆற்றாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முகமது அலி ஜின்னா, த.மு.மு.க மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராகீம், செயலாளர் அப்துல் ரஹீம், நகர செயலாளர் முகமது தமீம், நகர் தலைவர் முகமது அமீன், மாவட்ட செயலாளர் முகமது ஆசிக் சுல்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் த.மு.மு.க நகர தலைவர் முகமது அமீன் நன்றி கூறினார்.

  • ஜமாத் தலைவர் அபுல்ஹசன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
  • இப்தார் நிகழ்ச்சியில் முஸ்லிம் ஜமாத்தினர், சர்வ சமயத்தினர் கலந்துகொண்டனர்.

  சேரன்மகாதேவி:

  சேரன்மகாதேவியில் குத்பா முகைதீன் பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு, ஜமாத் தலைவர் அபுல்ஹசன் தலைமை தாங்கினார். செயலர் ஷேக் செய்யது அலி முன்னிலை வகித்தார். இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர் முகம்மது இஸ்ஹாக் ஹுசைன் தொடங்கி வைத்தார்.

  இதில் சிறப்பு விருந்தினராக சேரன்மகாதேவி இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் கலந்து கொண்டார். இமாம் மீரான்கனி,பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ், சேகரகுரு கிப்சன் ஜான்தாஸ், , அரிமா சங்கத்தினர் முருகேசன், அமல்ராஜ், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெருமாள் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், முஸ்லிம் ஜமாத்தினர், சர்வ சமயத்தினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை தக்வா பள்ளிவாசல் இமாம் குலாம் முகைதீன் ஜமாலி தொகுத்து வழங்கினார். ஜமாத் துணைச் செயலர் செய்யது அப்பாஸ் வரவேற்றார். இளைஞர் நற்பணி மன்றச் செயலர் இம்தியாஸ் நன்றி கூறினார்.

  • இரட்டை குவளை முறை, முடிவெட்ட மறுப்பது உள்ளிட்ட செயல்கள் நடந்து வருகிறது.
  • அனைத்து அரசியல் கட்சியிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமூக நல்லிணக்கத்தையும், அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி தலைமையில் மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் கலியபெருமாள், பாஸ்கர், மாவட்ட குழு உறுப்பினர் சீனி.முருகையன், ஒன்றிய செயலாளர்கள் பூபேஷ்குப்தா, வாசு.இளைய ராஜா, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம், சி.பி.எம்.எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் அருணாசலம், சமூக ஆர்வலர் ஏகலைவன் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கிளாமங்கலம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரட்டை குவளை முறை, முடிவெட்ட மறுப்பது உள்ளிட்ட செயல்கள் நடந்து வருகிறது.

  அந்தக் கிராமத்தில் நிலவி வரும் பதட்ட நிலையை போக்கிட அனைத்து அரசியல் கட்சியினரையும் கூட்டி பேச்சு வார்த்தை நடத்தி சமூக நல்லிணக்கத்தையும், அமைதியை ஏற்படுத்த வேண்டும்.

  இதேபோல் பட்டுக்கோ ட்டை வேப்பங்காடு பகுதியில் டாஸ்மாக் கடை கொண்டு வருவதை தடை செய்ய வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • சங்கரன்கோவில் தனியார் விடுதியில் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் சமூக நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.
  • முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

  சங்கரன்கோவில்:

  சங்கரன்கோவில் தனியார் விடுதியில் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் சமூக நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி காமராஜா தலைமை தாங்கினார்.

  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன், முன்னாள் ஆவின் சேர்மன் ரமேஷ், நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் பரமசிவன், மாரிசாமி, குருவிகுளம் முன்னாள் யூனியன் தலைவர் பாலசுப்பிரமணியன், மற்றும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பாலு, சிவராமன், மருதுபாண்டி, முருகன், சுப்பராஜ், சின்னச்சாமி, மாரியப்பன், முகமது நிஜாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

  கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பொன்ராஜ், துணைச் செயலாளர் ராமதுரை, ஒன்றிய தலைவர் லிங்கசாமி, நகர செயலாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென் மண்டல செயலாளர் வீரா அரவிந்தராஜா நன்றி கூறினார்.

  • மதசார்பற்ற கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

  திருத்துறைப்பூண்டி:

  திருத்துறைப்பூண்டியில் சமூக நல்லிணக்கம் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

  இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ, உலகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் மணிமேகலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், காங்கிரஸ் நகர தலைவர் எழிலரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் டி. பி .சுந்தர், ஒன்றிய செயலாளர் ஜெகவர், முத்துப்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, ம.தி.மு.க மாவட்ட பொருளாளர் கோவி சேகர், விடுதலை சிறுத்தை மாவட்ட செயலாளர் செல்வம், மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் இக்பால் ராஜா, மார்க்சிஸ்ட் நகரச் செயலாளர் கோபு மற்றும் மதசார்பற்ற கூட்டணிக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • அனைத்து கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி பல்லடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.
  • மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்ற பதாகைகளுடன் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.

  பல்லடம்:

  தமிழகத்தில் மதவெறியை வளர்த்து தமிழர்களை பிரித்து அரசியல் ஆதாயத்திற்காக பிரிவினைவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடிய அமைப்புகளின் வகுப்புவாத அரசியலை கண்டித்து பல்லடத்தில் அனைத்து கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி பல்லடம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்ற பதாகைகளுடன் மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.

  ×