சங்கரன்கோவிலில் சமூக நல்லிணக்க கூட்டம்

சங்கரன்கோவில் தனியார் விடுதியில் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் சமூக நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
கூட்டம் நடைபெற்றதை படத்தில் காணலாம்
கூட்டம் நடைபெற்றதை படத்தில் காணலாம்
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் தனியார் விடுதியில் தேவேந்திரகுல மள்ளர் தொழில் வர்த்தக சபை சார்பில் சமூக நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி காமராஜா தலைமை தாங்கினார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன், முன்னாள் ஆவின் சேர்மன் ரமேஷ், நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், நகர மன்ற உறுப்பினர்கள் பரமசிவன், மாரிசாமி, குருவிகுளம் முன்னாள் யூனியன் தலைவர் பாலசுப்பிரமணியன், மற்றும் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பாலு, சிவராமன், மருதுபாண்டி, முருகன், சுப்பராஜ், சின்னச்சாமி, மாரியப்பன், முகமது நிஜாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பொன்ராஜ், துணைச் செயலாளர் ராமதுரை, ஒன்றிய தலைவர் லிங்கசாமி, நகர செயலாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென் மண்டல செயலாளர் வீரா அரவிந்தராஜா நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com