search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
    X

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டபோது எடுத்த படம்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

    • நாட்டுமக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
    • நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சமூக நல்லிணக்க ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார். மாநகர இளைஞரணி துணை செயலாளர் நாசர்அலி முன்னிலை வகித்தார்.

    மாவட்ட பிரதிநிதி முகமது சைபுதீன் வரவேற்றார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன், பொருளாளர் நல்லூர் மணி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் சாந்தாமணி, 20-வது வார்டு கவுன்சிலர் குமார், மங்கலம் பகுதி ம.தி.மு.க. நிர்வாகிகள் பாபுசேட் பஷீர் அகமது, 28-வது வார்டு பிரதிநிதி அக்பர் அலி ஆகியோர் வாழ்த்து பேசினர்.

    இதில் ஜி.கே.கார்டன் பள்ளி தலைமை இமாம் ஹாஜி மவுலவி முகமது அப்துல் கனி பிரார்த்தனை செய்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாமுண்டிபுரம் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலின் தலைவர் நாசர், பொருளாளர் முகம்மது இஸ்மாயில், செயலாளர் ஹிதாயத்துல்லா, முத்தவல்லி ஜமாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சமூக ஒற்றுமை வேண்டியும், நாட்டுமக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மும்மதத்தினரும் சமூக நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டின் பேரில் நலஉதவிகள் வழங்கப்பட்டது. இதில் ம.தி.மு.க. பகுதி செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, ஆனந்தகுமார், தளபதி பிரபு, செந்தில்குமார், நல்லூர் ராஜு, மாநகர துணை செயலாளர் பூபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×