என் மலர்
நீங்கள் தேடியது "ம.தி.மு.க."
- ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.
- விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம்:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அந்த கட்சியின் முதன்மை செயலாளராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று திடீரென்று அறிவித்தார். இதனால் கட்சியினரிடையே பரபரப்பு நிலவியது. ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.
இந்த நிலையில் ராஜினாமாவை துரை வைகோ வாபஸ்பெற வேண்டும், இயக்கத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியில் விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், செட்டியார்பட்டி செயலாளர் நாகப்பன், சேத்தூர் செயலாளர் அயனப்பன், ராஜபாளையம் ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருநெல்வேலி ரோட்டில் முறம்பு பகுதியிலும் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
- 20-ந்தேதி நிர்வாக குழுவை கூட்டி தலைவர் வைகோ விவாதிக்கிறார்.
- மகனா? மல்லை சத்யாவா? என்ற கேள்வி வரும் போது வைகோ என்ன முடி வெடுப்பார்.
சென்னை:
ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருப்பவர் மல்லை சத்யா. கட்சியின் மூத்த நிர்வாகி என்பதோடு கட்சி தொடங் கப்பட்டது முதல் வைகோவுடன் பயணித்து கொண்டு இருப்பவர்.
கட்சி நலிவடைந்த போது எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், பாலவாக்கம் சோமு போன்ற முக்கிய நிர்வாகிகள் வெளியேறினார்கள். ஆனாலும் எந்த சலனமும் இல்லாமல் மல்லை சத்யா வைகோவுடனேயே இருக்கிறார்.
இந்த நிலையில் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே எழுந்துள்ள மோதல் உச்ச கட்டத்தை அடைந்து திருச்சி யில் ம.தி.மு.க.வினர் மல்லை சத்யாவை நீக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு சென்றிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை தாயகத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் இந்த விவகாரம் வெடித்தது. வைகோ முன்னிலையில் கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் துரை வைகோவின் ஆதரவாளர் சத்யகுமரன், இது துரை வைகோவின் காலம். அவரது கட்டளையை ஏற்காத, பின்பற்றாத, மதிக்காத யாராக இருந்தாலும் பெட்டியை கட்டிக் கொண்டு வாயை பொத்திக் கொண்டு வெளியேறுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு பதிலடி கொடுத்து மல்லை சத்யா வெளியிட்ட பதிவில் ம.தி.மு.க.வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினிவேஷம், வெளியேறு என்ற விருதுகளை எனக்கு அளித்துள்ளார்கள். அவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள் என்பதையும் விசுவாசமுள்ள கட்சியினர் அறிவார்கள்.
விளிம்பு நிலை தலைமுறையில் இருந்த என்னை குன்றின் மேல் வைத்து அழகு பார்த்து, அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுவதும் நன்றியோடு இருப்பேன். என் விசுவாசம், நம்பகத் தன்மையை வைகோ அறிவார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இன்று வைகோவின் அழைப்பின் பேரில் கோயம்பேட்டில் அம்பேத் கார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியிலும் மல்லை சத்யா பங்கேற்றார்.
இது தொடர்பாக கருத்து கேட்க மல்லை சத்யாவை தொடர்பு கொண்ட போது எதுவும் கூற மறுத்துவிட்டார்.
அவருக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்த போது, துரை வைகோ கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அவரை சுற்றியிருக்கும் சிலர் மல்லை சத்யாவை காயப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த 4 ஆண்டுகளாக அவரது பெயரை கூட சென்னையில் எந்த நிகழ்ச்சியிலும் போடக் கூடாது. சுவர் விளம்பரங்கள், பேனர்களிலும் பெயர் போட்டோக்கள் இடம் பெறக் கூடாது என்று கட்டுப்பாடு போட்டு உள்ளார்கள்.
கட்சி தொடங்கியதில் இருந்து எவ்வளவு போராட் டங்கள், எத்தனை முறை ஜெயில் என்று கட்சிக்காகவே உழைத்து கொண்டிருப்பவர். தன் மீது போடப்பட்ட பல வழக்குகளை கோர்ட்டில் சந்தித்து வென்று இருக்கிறார். அவரையே அசிங்கப்படுத்தி ஓரம் கட்ட வேலை பார்க்கிறார்கள்.
நேற்று முன் தினம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய துரை வைகோ வை சமாதானப்படுத்த ஓடியவர்களில் ஒருவர் மல்லை சத்யாவை நான் தாக்குகிறேன் தலைவரே என்று சொன்னபோதும் அதை துரை வைகோ கண்டிக்கவில்லை. எனவே அவரது மனநிலை புரிகிறது.
20-ந்தேதி நிர்வாக குழுவை கூட்டி தலைவர் வைகோ விவாதிக்கிறார். மகனா? மல்லை சத்யாவா? என்ற கேள்வி வரும் போது வைகோ என்ன முடி வெடுப்பார் என்று தெரிய வில்லை. நிச்சயம் மல்லை சத்யா கட்சியை விட்டு விலக வாய்ப்பு இல்லை. ஆனால் அவரை வெளி யேற்ற வாய்ப்பு இருப்ப தாகவே கருதுகிறோம் என்றனர்.
நிர்வாக குழுவில் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- ம.தி.மு.க. செயலாளராக ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்
- வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. பொருளாளராக இருந்த ஜெயசீலன் தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில பொதுசெயலாளர் வைகோ, தலைமை கழக செயலாளர் துரை வைகோ, ம.தி.மு.க. உயர்நிலைக்குழு உறுப்பினரும், அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சின்னப்பா, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோரை சந்தித்து ஜெயசீலன் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
இதை தொடர்ந்து நேற்று பெரம்பலூரில் உள்ள காந்தி, அம்பேத்கார் ஆகியோரது உருவ சிலைக்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியின் போது மாவட்ட அவைத்தலைவர் செல்ல கதிர்வேல், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, மாவட்ட துணை தலைவர் சரவணன், மாவட்ட துணை செயலாரும், பேரூராட்சி கவுன்சிலருமான ரபியுதீன், ஆசிரியர் காமராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் வருகிற 26,27- ந் தேதிகளில் நடைபெறுகிறது.
- 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 26,27- ந் தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.
இந்த முகாமினை பயன்படுத்தி தாங்கள் வார்டுக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ம.தி.மு.க.வினர் ஈடுபட வேண்டும். மேலும் அனைத்து நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டு புதிய இளம் வாக்காளர்களை சேர்க்க மும்முரமாக களப்பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ஆலோசனை கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார்.
- ம.தி.மு.க. தலைமை கழக செயலர் துரை வைகோ, விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுடன் ம.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுசெயலர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலர் விநாயகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்துரைத்தனர். பின்னர் ம.தி.மு.க. தலைமை கழக செயலர் துரை வைகோ, விவசாயிகளிடையே கலந்துரையாடினார்.
இதைத்தொடர்ந்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளின் அட்ட காசம் அதிகமாக உள்ளது.காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு காண்பது குறித்து ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியிடம் பேசினேன். தி.மு.க. அரசு, வனத்துறை அதிகாரிகளை கொண்டு குழு அமைத்துள்ளனர். இதற்கு தீர்வு காண முயற்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கேரள மாநிலத்திலும் காட்டுப்பன்றி களின் தொல்லை அதிகம் உள்ளது.
1972-ம் ஆண்டு வனவிலங்கு சட்டப்படி 6 அட்டவணை உள்ளது. இதில் காட்டுப்பன்றி 3-வது அட்டவணையில் உள்ளது. 5-வது அட்டவணையில் உள்ள விலங்குகளை யார் வேண்டுமானாலும் அழிக்கலாம். ஏனென்றால், அது மனிதர்களுக்கு, விவசாயத்திற்கு தொல்லை கொடுக்கக் கூடியது. எனவே, அந்த 5-வது அட்டவணையில் காட்டுப்பன்றிகளை சேர்க்க வேண்டும்.
காட்டுப்பன்றியை 5-வது அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என கேரள மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இது சாத்தியப்படாது என மத்திய அரசு பதில் கூறியுள்ளது. இதே மத்திய அரசு, உத்தரப்பிரகேசம், பீகார் மாநிலங்களில் காட்டுப்பன்றி களை அட்டவணை 5-க்கு மாற்றி, ஓராண்டு நடைமுறைப்படுத்தியது. அந்த ஓராண்டில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது.
கேரளாவில் ஊராட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை கொடுத்து, கிராமக்குழுக்களை கொண்டு காட்டுப்பன்றி களை வேட்டையாடலாம் என சட்டம் கொண்டு வந்துள்ளது. இதுபோன்று தமிழகத்தில் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தலைமையில் மனு அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், ம.தி.மு.க. ஒன்றிய செயலர்கள் கேசவ நாராயணன், சரவணன், மாரிச்சாமி, நகர செயலர் பால்ராஜ், குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவி விஜயலட்சுமி, நிர்வாகிகள் சிவகுமார், கோடையிடி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் முத்துகிருஷ்ணன், முத்துச்செல்வம், வன ராஜன், முத்துபாண்டியன், நாகராஜன், லியோ செண்பக ராஜ், கணேசன், பவுன்மாரியப்பன் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- புறநகர் மாவட்ட பொருளாளர் சண்முகசுப்பிரமணியம், பல்லடம் ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
- நெசவாளர் அணி செயலாளர் திருநாவுக்கரசு, தொண்டரணி அமைப்பாளர் ராஜகோபால் பகுதி செயலாளர்கள் சம்பத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
ம.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகர் பகுதியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட பொருளாளர் நல்லூர் மணி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மணி, புறநகர் மாவட்ட பொருளாளர் சண்முகசுப்பிரமணியம், பல்லடம் ஒன்றிய செயலாளர் சந்திரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் திருப்பூர் சாமுண்டிபுரத்தில் அடுத்த மாதம் 16-ந்தேதி ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொள்ளும் 5 ஆயிரம் சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்தினசாமி, மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி, பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல், மாநகர் மாவட்ட துணை செயலாளர்கள் மணி, பூபதி, இளைஞரணி செயலாளர் சதீஸ்குமார், வழக்கறிஞரணி துணை செயலாளர்கள் கந்தசாமி, அன்பழகன், புறநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ரவி, மாணவரணி அமைப்பாளர் தாமோதரன், நெசவாளர் அணி செயலாளர் திருநாவுக்கரசு, தொண்டரணி அமைப்பாளர் ராஜகோபால் பகுதி செயலாளர்கள் சம்பத், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாட்டுமக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
- நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சமூக நல்லிணக்க ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமை தாங்கினார். மாநகர இளைஞரணி துணை செயலாளர் நாசர்அலி முன்னிலை வகித்தார்.
மாவட்ட பிரதிநிதி முகமது சைபுதீன் வரவேற்றார். மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன், பொருளாளர் நல்லூர் மணி, மாநில மகளிரணி துணைச் செயலாளர் சாந்தாமணி, 20-வது வார்டு கவுன்சிலர் குமார், மங்கலம் பகுதி ம.தி.மு.க. நிர்வாகிகள் பாபுசேட் பஷீர் அகமது, 28-வது வார்டு பிரதிநிதி அக்பர் அலி ஆகியோர் வாழ்த்து பேசினர்.
இதில் ஜி.கே.கார்டன் பள்ளி தலைமை இமாம் ஹாஜி மவுலவி முகமது அப்துல் கனி பிரார்த்தனை செய்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சாமுண்டிபுரம் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலின் தலைவர் நாசர், பொருளாளர் முகம்மது இஸ்மாயில், செயலாளர் ஹிதாயத்துல்லா, முத்தவல்லி ஜமாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சமூக ஒற்றுமை வேண்டியும், நாட்டுமக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மும்மதத்தினரும் சமூக நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் ஏற்பாட்டின் பேரில் நலஉதவிகள் வழங்கப்பட்டது. இதில் ம.தி.மு.க. பகுதி செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, ஆனந்தகுமார், தளபதி பிரபு, செந்தில்குமார், நல்லூர் ராஜு, மாநகர துணை செயலாளர் பூபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
- அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ம.தி.மு.க. தலைமை அறிவிப்பின்படி, திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் பணி துணைச் செயலாளர் சேதுபதி தேர்தல் ஆணையாளராக செயல்பட உள்ளார். தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் காலை 11 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள பெரியார், அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த இரு நிகழ்ச்சிகளிலும் வட்டக்கழக நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், மாநகர் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக வருகை தந்து சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- 5-வது அமைப்புத்தேர்தல் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
- அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருப்பூர் :
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கான 5-வது அமைப்புத்தேர்தல் திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக ம.தி.மு.க.தேர்தல் பணி துணைச்செயலாளர் அ.சேதுபதி, துணை ஆணையாளர்களாக கோவை மாநகர இளைஞரணி துணை செயலாளர் தங்கவேல், கோவை பகுதி செயலாளர் விஸ்வராஜ் ஆகியோர் செயல்பட்டனர்.
இதில் மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி மாநகர் மாவட்ட அவைத்தலைவராக நேமிநாதன், மாநகர் மாவட்ட செயலாளராக ஆர்.நாகராஜ், பொருளாளராக நல்லூர் மணி என்ற சண்முகசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினராக சக்திவேல், துணை செயலாளர்களாக குமார், தாமோதரன், வழக்கறிஞர் தமயந்தி கந்தசாமி, பூபதி, பொதுக்குழு உறுப்பினர்களாக சதீஷ்குமார், ராமசாமி, கவுரிசங்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் தலைமையில் புதிய நிர்வாகிகள் உள்பட கட்சி நிர்வாகிகள் அனைவரும் ரெயில்நிலையம் அருகே உள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கு சென்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்கள். இதில் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே.மணி, பல்லடம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மாநில மகளிரணி துணை செயலாளர் சாந்தாமணி உள்பட மாவட்ட, மாநகர, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- ம.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்
- பல்வேறு பொறுப்புகளுக்கு வேட்பு மனு
அரியலூர்:
அரியலூரிலுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ம.தி.மு.க. உள்கட்சி தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அக்கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்தெடுப்பதற்கான வேட்பு மனு தாக்கல், சட்டப் பேரவை உறுப்பினர் சின்னப்பா தலைமையில் தொடங்கியது. மாநில கொள்கை பரப்புச் செயலர் வந்தியத்தேவன் பங்கேற்று, மாவட்டக் கழகத்தில் உள்ள பல்வேறு பொறுப்புகளுக்கான வேட்புமனுக்களை கட்சி நிர்வாகிகளிடமிருந்து பெற்றார்.
இதையடுத்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி அரியலூர் மாவட்ட அவைத் தலைவராக ந.சகாதேவன், மாவட்டச் செயலாளராக க.ராமநா தன், பொருளாளராக வீர.புகழேந்தி, துணைச் செயலாளர்களாக க.கல்யாணகுமார், உஷாசெல்வம், கோ. பழனிவேல், சே.கலிஸ்துராஜ், தலைமை செயற்குழு உறுப்பினராக பெ.தங்கவேல் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்களாக இ.இளவரசன், மோகன்தாஸ், சி.ஜெயபால், தங்கராசு, கொளஞ்சி(எ)சிவகுமார் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- கொடியேற்று விழாவிற்கு சுப்பாராஜ் தலைமை தாங்கினார்.
- மாநில துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கொடியேற்றி வைத்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் ரோட்டில் ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சுப்பாராஜ் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல் குமார் வரவேற்று பேசினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கொடியேற்றி வைத்தார்.
விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் இசக்கியப்பன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் முகம்மது ஹக்கீம், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலபதி, மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலட்சுமி, ஒன்றிய செயலாளர் சசி முருகன், நகர துணைச் செயலாளர் ராஜேஸ்வரி இசக்கியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கசாமி, அய்யனார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மின் கம்பத்தை புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
- பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 24 -வது வார்டு சாமுண்டிபுரம் சலவைக்காரர் 3 வது வீதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக 3 மின் கம்பம் இருந்தது. இதனை மாற்றுவதற்கு மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் மின் கம்பத்தை மாற்றி புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
உடனடியாக ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜின் முயற்சியில்இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக அப்பகுதி பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் ஒத்துழைப்புடன் மின்சார வாரியத்துக்கு கட்ட வேண்டிய தொகை ரூ. 68,210யை பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று மீதமுள்ள ரூ.28 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து கொடுத்து உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார். அப்போது மாமரத்து வீதியைச் சார்ந்த கோபி என்ற பழனி குமார் , உதவியாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.






