என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MDMK protest"

    • தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் பணி மிகப்பெரிய ஜனநாயக மோசடியாகும்.
    • எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.

    கோவை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவை மெட்ரோ ரெயில் திட்டம் என்பது முன்பே அறிவிக்கப்பட்டது. தமிழக அரசும் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு அறிக்கை தயாரித்து அனுப்பியது. அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தமிழக அரசு பதில் அளித்தது.

    இந்த நிலையில் திடீரென நேற்று மாலை கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்து இருக்கிறது.

    20 லட்சத்திற்கு குறைவாக இருப்பதால் அனுமதி கொடுக்க இயலாது என கூறி ரத்து செய்திருக்கிறது. ஆனால் மக்கள் தொகை குறைவாக உள்ள ஆக்ரா, போபால், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி அளித்து அங்கு பணிகள் தொடங்கி விட்டன.

    ஆனால் மக்கள் தொகையை காரணம் காட்டி, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்திற்கு எதிரானது. மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்து, மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம், வஞ்சம் செய்துள்ளது.

    கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்தும், மெட்ரோ ரெயில் திட்டம் மீண்டும் செயல்படுத்த கோரியும் வருகிற 24-ந் தேதி(திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ம.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

    தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள எஸ்.ஐ.ஆர் பணி மிகப்பெரிய ஜனநாயக மோசடியாகும். தேர்தல் ஆணையம் ஒருசாராகவே செயல்பட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பிரதமர் மோடி தமிழகத்தில் வந்து திருக்குறளையும், பாரதியார் பாட்டையும் மனப்பாடம் செய்து படித்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. அதனை தமிழக மக்கள் யாரும் நம்பமாட்டார்கள் என்றார். 

    • ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.
    • விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ராஜபாளையம்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ அந்த கட்சியின் முதன்மை செயலாளராக கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தன்னுடைய பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ நேற்று திடீரென்று அறிவித்தார். இதனால் கட்சியினரிடையே பரபரப்பு நிலவியது. ம.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பதவி விலக கூடாது என வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் ராஜினாமாவை துரை வைகோ வாபஸ்பெற வேண்டும், இயக்கத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் மல்லை சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியில் விருதுநகர் மேற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், செட்டியார்பட்டி செயலாளர் நாகப்பன், சேத்தூர் செயலாளர் அயனப்பன், ராஜபாளையம் ஒன்றிய துணை செயலாளர் ராஜகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருநெல்வேலி ரோட்டில் முறம்பு பகுதியிலும் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    • கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று ம.தி.மு.க. வலியுறுத்துகிறது.
    • வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    ம.தி.மு.க. 30-வது பொதுக்குழு இன்று சென்னை அண்ணாநகர், விஜயஸ்ரீ மஹாலில், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றினார்.

    பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ. சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கழகப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

    நீட் தேர்வில் தொடர் மோசடிகள், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும்; தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று ம.தி.மு.க. வலியுறுத்துகிறது.

    பா.ஜ.க. அரசின் வரவு செலவு திட்ட அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும், பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்தி உள்ளதைக் கண்டித்தும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரியும், நிலுவையில் உள்ள ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும், நீட் தேர்வில் நடைபெற்று வரும் மோசடிகளைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 14-ந் தேதி காலை 10 மணிக்கு வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் மதுக் கடைகளை படிப்படியாக மூடுவதுடன் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களைப் போல முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பூந்தமல்லி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கலால் வரி உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பூந்தமல்லி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் ஒன்றிய செயலாளர் கைலாசம், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் நெமிலிச்சேரி பாபு, தீர்மா னக்குழு செயலாளர் மணிவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ×