என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிமுக பொதுக்குழு"

    • 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும்.
    • தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் ஊது குழலாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

    ம.தி.மு.க. 31-வது பொதுக்குழு இன்று காலை 10 மணி அளவில் ஈரோடு, பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மகாலில், அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப்பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ.சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழுவில் 28 நிறைவேற்றப்பட்டன.

    * 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டும்.

    * 2026 சட்டப்பேரவை தேர்தலில் கழகம் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏதுவாக கூடுதல் தொகுதிகளைக் கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும். இந்த ஆண்டு அறிஞர் அண்ணா 117-வது பிறந்த நாள் விழா மாநாட்டை திருச்சியில் நடத்துவது.

    * பல்வேறு சதிகளின் மூலமாக தமிழ் மொழியையும், தமிழரின் தொன்மை வரலாற்றையும் இருட்டடிப்பு செய்ய முயலும் பாசிச சக்திகளை முறியடிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஆகும்.

    * கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். வக்ப் திருத்த சட்டத்தையும் திரும்பப் பெறுவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து போராட வேண்டும்.

    * தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் ஊது குழலாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி செயல்படும் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு நிகராக கட்டமைப்புகளை மேம்படுத்தி ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களின் கல்வி நலனை பேணி பாதுகாக்க வேண்டும்.

    * மருத்துவ காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். முழு மதுவிலக்கு என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் படிப்படியாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்.

    * பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத இறக்குமதி வரியை ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் மாத இறுதி வரையாவது நீக்க வேண்டும். பருத்தி விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. செயற்கை இழை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு விதிமுறை ஏற்புடையதல்ல. அவற்றை நீக்கினால் செயற்கை இழை ஜவுளித்தொழில் மிக சிறப்பான வளர்ச்சி பெறும்.

    * ரசாயன கழிவு நீரை காகித ஆலைகள் பவானி நதியில் கலப்பதால் பவானி ஆற்றில் வரும் நீர் ரசாயன கழிவுநீராக மாறி உள்ளது. இதனை பயன்படுத்தும் பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக புற்றுநோய் மற்றும் இதர தோல் நோய்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    * இதனை ம.தி.மு.க.வும், இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் செய்தி ஊடகங்களும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், தமிழக அரசின் கவனத்திற்கும் எடுத்துச்சென்று உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதனைக் கருத்தில் கொண்டு பவானி நதியைக் காப்பாற்ற தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையின் கழிவு நீரால் சேதமடைந்துள்ள நிலத்தடி நீர்வளத்தை சீர்செய்திட அத்திக்கடவு, அவிநாசி திட்டத்தைப் போல ஒரு சிறப்பு திட்டத்தை பெருந்துறை வட்டத்தில் செயல்படுத்திட வேண்டும்.

    * ஈரோட்டின் மாசு கட்டுப்பாட்டை உறுதி செய்து இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டும். பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி, கொங்கு மண்டலத்தின் நீராதாரத்தை மேம்படுத்தி வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்திட வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்தின் பழமையான காளிங்கராயன் கால்வாய் உட்பட மாசடைந்துள்ள கால்வாய்கள், ஆறுகள் உள்ளிட்டவற்றை மாசின்றி தூய்மையாகப் பராமரிக்க சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ம.தி.மு.க. 5-வது அமைப்புத் தேர்தலை முன்னிட்டு, 61 மாவட்டங்களில் 25 லட்சதது 8 ஆயிரத்து 786 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டார்கள்.
    • கிளை, வட்டம், பேரூர், நகரம், ஒன்றிய, பகுதி, மாவட்ட, மாநகர் மாவட்ட ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் தேர்தல் முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டு விட்டன.

    சென்னை:

    ம.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ம.தி.மு.க. 5-வது அமைப்புத் தேர்தலை முன்னிட்டு, 61 மாவட்டங்களில் 25 லட்சதது 8 ஆயிரத்து 786 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டார்கள். கிளை, வட்டம், பேரூர், நகரம், ஒன்றிய, பகுதி, மாவட்ட, மாநகர் மாவட்ட ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் தேர்தல் முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. நிறைவாக தலைமை நிர்வாகிகள், ஆட்சிமன்றக் குழு, தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு வேட்பு மனுக்கள் வழங்கியவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். 14-ந்தேதி அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் ம.தி.மு.க. 29-வது பொதுக்குழுவில் இந்த நிர்வாகிகள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று ம.தி.மு.க. வலியுறுத்துகிறது.
    • வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    ம.தி.மு.க. 30-வது பொதுக்குழு இன்று சென்னை அண்ணாநகர், விஜயஸ்ரீ மஹாலில், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரை ஆற்றினார்.

    பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.ஏ. சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முற்றாக புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு கழகப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.

    நீட் தேர்வில் தொடர் மோசடிகள், முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், நீட் தேர்வு ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டும்; தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று ம.தி.மு.க. வலியுறுத்துகிறது.

    பா.ஜ.க. அரசின் வரவு செலவு திட்ட அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்தும், பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு அலட்சியப்படுத்தி உள்ளதைக் கண்டித்தும், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு கோரியும், நிலுவையில் உள்ள ரெயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரியும், நீட் தேர்வில் நடைபெற்று வரும் மோசடிகளைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 14-ந் தேதி காலை 10 மணிக்கு வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் மதுக் கடைகளை படிப்படியாக மூடுவதுடன் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களைப் போல முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×