14-ந்தேதி ம.தி.மு.க. பொதுக்குழு

ம.தி.மு.க. 5-வது அமைப்புத் தேர்தலை முன்னிட்டு, 61 மாவட்டங்களில் 25 லட்சதது 8 ஆயிரத்து 786 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டார்கள். கிளை, வட்டம், பேரூர், நகரம், ஒன்றிய, பகுதி, மாவட்ட, மாநகர் மாவட்ட ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் தேர்தல் முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டு விட்டன.
14-ந்தேதி ம.தி.மு.க. பொதுக்குழு
Published on

சென்னை:

ம.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ம.தி.மு.க. 5-வது அமைப்புத் தேர்தலை முன்னிட்டு, 61 மாவட்டங்களில் 25 லட்சதது 8 ஆயிரத்து 786 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டார்கள். கிளை, வட்டம், பேரூர், நகரம், ஒன்றிய, பகுதி, மாவட்ட, மாநகர் மாவட்ட ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் தேர்தல் முறைப்படி நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. நிறைவாக தலைமை நிர்வாகிகள், ஆட்சிமன்றக் குழு, தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கு வேட்பு மனுக்கள் வழங்கியவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள். 14-ந்தேதி அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் ம.தி.மு.க. 29-வது பொதுக்குழுவில் இந்த நிர்வாகிகள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com