search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Rajapalayam"

  • பேயனாறு, சிற்றாறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.
  • 108 கண்மாய்களிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

  ராஜபாளையம்:

  விருதுநகர் மாவட்டம் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவில் பலத்த மழை பெய்து வருகி றது. இதன் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதோடு, கண் மாய், வறண்டு கிடந்த கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

  இதன் காரணமாக மதுரை மாவட்டம் பேரையூர் தொடங்கி செண்பகத் தோப்பு, அய்யனார்கோவில், தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதி வரை கடுமையான மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் வெளியேறி தங்கு தடை இன்றி அடிவாரத்தை நோக்கி வருகிறது.

  குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கன மழையால் அதன் அடிவாரத்தில் அமைந்துள்ள ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோவில் அருவி, ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு பேயனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள மீன் வெட்டி பாறை உள்பட 10-க்கும் மேற்பட்ட அருவிகளில் வெள்ள நீர் பாய்ந்து வருகிறது. அதேபோல் பேயனாறு, சிற்றாறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.

  இதற்கிடையே செண்பகதோப்பு பகுதிக்குள் ஒரு குழுவினர் குளிக்கச் சென்று மழை வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்ட போது மம்சாபுரம் போலீசாரும் தீயணைப்பு மற்றும் பேரிடர்மீட்பு படையினரும் அவர்களை மீட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

  மேற்கண்ட இந்த பகுதிகளில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்க ளாகவும் விளங்குகிறது. கோடை வெயில் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அருவிகள், காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர் வரத்து படிப்படியாக குறைந்தது.

  வழக்கமாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும் தேவதானம் சாஸ்தா கோவில் ஆறு, அய்யனார் கோவில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோவில் அருவி, செண்பகத் தோப்பு மீன்வெட்டி பாறை அருவி ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.

  இந்நிலையில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று மதியம் முதல் இரவு முழு வதும் விடிய விடிய மழை பெய்தது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள அய்ய னார் கோவில் ஆறு, செண் பகத்தோப்பு பேயனாறு மற்றும் அதனைச் சார்ந்த நீர்வீழ்ச்சிகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

  இதன் மூலம் தேவதானம் சாஸ்தா கோவில் அணை, ராஜபாளையம் நகரின் பிரதான குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நீர்த்தேக்கம் ஆகியவற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள 108 கண்மாய்களிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

  இந்தநிலையில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் ராஜபாளையம் அய்யனார் கோவில், ராக்காச்சி அம்மன் கோவில், சாஸ்தா கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுத்து நிறுத்தி மழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது என்று கூறி திருப்பி அனுப்பி வைத்தார்.

  இதேபோல் அந்த பகுதியில் மலைப்பகுதியில் வேலைக்குச் செல்பவர்களும் பத்திரமாக சென்று வர வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி வருகிறார். இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் பாதுகாப்பான இடங்க ளில் ஒதுங்கி நிற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

  • ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டியில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
  • ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

  ராஜபாளையம்

  ராஜபாளையம் அருகே உள்ள குறிச்சியார்பட்டி தெற்கு தெருவில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. சுவாமி சிலைகள் ஊர்வலமாக கேரளா செண்டை மேளதாளத்துடன் காளியம்மன் கோவில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறப்பட்டு தெற்கு தெரு காளியம்மன் கோவில் வந்தடைந்தது. சுவாமி சிலைகளுக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

  அதனை தொடர்ந்து யாகசாலை பூஜை ஆச்சாரி யர் வர்ணம் கணபதி பூஜை யுடன் தொடங்கியது. 2 நாள் யாகசாலை பூஜையை அடுத்து கிருஷ்ணன் கோவி லில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து மேளதாளத்துடன் வந்தனர்.

  ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  அதன் பின் அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் தீப ஆராதனை வழிபாடு நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது

  சங்கரன்கோவில் சக்தி பிரியா தெம்மாங்கு குழு வினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கேரளா ராஜ்மகாதேவன் நம்பூதிரி நடத்தி வைத்தார்.

  விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை பொருளாளரும், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரு மான குறிச்சியார்பட்டி மாரியப்பன் தலைமையில் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

  • ராஜபாளையத்தில் அ.தி.மு.க. சார்பில் வ.உ.சி.152-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
  • அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

  ராஜபாளையம்

  விருதுநகர் மேற்கு மாவட்டம், ராஜபாளையம் நகர வடக்கு, தெற்கு அ.தி.மு.க. சார்பில் சுதந்தி ரபோராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 152-வது பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகர வடக்கு செயலாளர் வக்கீல் துரைமுருகேசன் தலை மையில், தெற்கு செயலாளர் பரமசிவம் முன்னிலையில் ராஜபாளையம் டி.பி.மில்ஸ் ரோட்டில் உள்ள வ.உ.சி. சிலைக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

  நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ், மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் அழகு ராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் யோகசேகரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகாபுரியான், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ண மூர்த்தி, நகர மகளிர் அணி செயலாளர் ராணி மற்றும் முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  • ராஜபாளையத்தில் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் நடந்தது.
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  ராஜபாளையம்

  ராஜபாளையம் சமந்தபுரம் காஜியார் மினி ஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் விருதுநகர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட அமைப்பாளர் லீவா உதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சையது இப்ராஹீம், மாவட்ட பொருளாளர் முகமது பிலால் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செய்யது அலி பாதுஷா வரவேற்று பேசினார். நகரத் தலைவர் முகமது ரபிக் மிஸ்பாகி, மாநில தொழில் நுட்ப இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், மண்டல ஒருங்கிணைப்பாளர் அவ்தா காதர் வாழ்த்தி பேசினார்கள். மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முகமது அபூபக்கர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்தில் லீவாவுதீன் மாவட்ட தலைவராகவும், சையது இப்ராஹிம் மாவட்ட செயலாளராகவும், முகமது பிலால் மாவட்ட பொருளாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக ராஜபாளையம் காதர் மைதீன், முகமது அபூபக்கர், பார்கவி தேர்ந்தெடுக்கப் பட்டனர். பொது சிவில் சட்டத்தை முழுமையாக எதிர்ப்பது எனவும், மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க. அரசை கலைத்து ஆளுநர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் காதர்மைதீன் நன்றி கூறினார்.

  • ராஜபாளையத்தில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி இன்று மாலை தொடங்குகிறது.
  • நகர்மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்குகிறார்.

  ராஜபாளையம்

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டிகள் இன்று (20-ந் தேதி) மாலை முதல் தொடங்குகிறது.

  ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் மாலை 4 மணியளவில் கபடி போட்டிகள் தொடங்குகின்றன.

  நகர் மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்குகிறார். ராஜுக்கள் கல்லூரி செயலாளர் சிங்கராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு கபடி போட்டிகளை தொடங்கி வைக்கின்றனர்.

  கே.எஸ்.ஆர். பஸ் சர்வீஸ் அதிபர் பிரகாஷ் சங்கர், அர்ஜுனா விருது பெற்ற வீரர் கணேசன், கலால்துறை கண்காணிப்பாளர் கனிமுத்து குமரன், மதுரை வல்லத்தரசு ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

  இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடி தலைவர் சுப்பிரமணிய ராஜா, செயலாளர் கனிமுத்து குமரன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

  இந்த போட்டிகளை காவல்துறை அணி உள்பட 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

  • ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில், தொம்பக்குளம் விலக்கு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.
  • கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் புகார் கொடுத்தார்.

  ராஜபாளையம்

  ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில், தொம்பக்குளம் விலக்கு பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கீழராஜகுலராமன் வருவாய் ஆய்வாளர் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது இறந்து கிடந்தவர் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

  போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • ராஜபாளையத்தில் புறவழிசாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
  • அமைச்சர் எ.வ.வேலு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

  ராஜபாளையம்

  ராஜபாளையத்தில் புறவழிசாலை அமைக்க தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறையின் ஆய்வுக்கூட்டத்திற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் ராஜபாளையம் நகரில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.

  அதில் ராஜபாளையம் நேரு சிலை முதல் சொக்கர் கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலையை தற்காலிகமாக (பேட்ச்ஒர்க்) சீரமைக்கப்பட்டது .

  இந்த சாலையில் விரை வில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.ராஜபாளையம் தொகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கில் இருந்து கோதை நாச்சியார்புரம் வழியாக அமிழ் ஓட்டல் வரை புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது.மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் எ.வ.வேலு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

  • ராஜபாளையத்தில் கனமழை பெய்தது. இதனால் அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
  • ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

  ராஜபாளையம்

  ராஜபாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது.

  மழையின் காரணமாக அய்யனார் கோவில், நீராவி ஆறு, 6-வது மைல் நீர்த்தேக்க ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

  நகர்மன்ற தலைவர் பவித்ராஷியாம்ராஜா ஆலோசனையின்படி அய்யனார் கோவில் ஆற்றில் இருந்து வரக்கூடிய தண்ணீர் 6-வது மைல் நீர்த்தேக்கத்தில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

  இதன் காரணமாக இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதிதெரிவித்தார்.

  மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நகர் பகுதியில் தொடர்மழை பெய்ததால் நிலத்தடி நீரும் உயர்ந்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • ராஜபாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
  • குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

  ராஜபாளையம்

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் ெரயில்வே மேம்பால பணிகள், ராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய 3 பணிகளும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பாதைகளும் குண்டும் குழியுமாகி விட்டது.

  பொதுமக்கள் அன்றாடம் செத்துப் பிழைக்கும் நிலை இருந்து வருகிறது. குறிப்பாக ராஜபாளையத்தில் பிரதான சாலையான தென்காசி தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

  இதில் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் வரை செல்வதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது.

  இதனால் ராஜபாளையம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் ராஜபாளையத்தை தவிர்த்து வேறு வழியாக சென்று வருகின்றனர். உள்ளூர் வாசிகள் சென்றாக வேண்டிய கட்டா யத்தில் தூசிகளுக்கிடையே சென்று வருகிறார்கள்.

  இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நினைவூட்டல் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை.

  இதை கண்டித்தும், சாலை மற்றும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலிறுத்தி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடை அடைப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

  • ராஜபாளையம் அன்னப்பராஜா பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
  • தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார்.

  ராஜபாளையம்

  ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ரா ஷியாம்ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விலையில்லா சைக்கிள்களை மாணவ,மாணவிகளுக்கு வழங்கி பேசினார்.

  ராமச்சந்திர ராஜா அறக்கட்டளை தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா, அறக்கட்டளை உறுப்பினர்கள் ராம்விஷ்ணு ராஜா, ராம்வெங்கட்ராஜா மற்றும் ராகஜோதி ராம்விஷ்ணு ராஜா, கருத்தாளர்கள் சிவகுமார், பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர். உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.