என் மலர்
நீங்கள் தேடியது "male body"
- ரெயில்வே பாதையின் நடுவில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இறந்து கிடந்தார்.
- ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே ஆணைவாரி பகுதியில் ரெயில்வே பாதை உள்ளது. இப்பகுதி மக்கள் இன்று காலை அங்கு சென்ற போது ரெயில்வே பாதையின் நடுவில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் இறந்து கிடந்தார். இதையடுத்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
திருவெண்ணைநல்லூர் போலீசார் விருத்தாசலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலையில் சென்ற ராமேஸ்வரம் அஜ்மீர் ரெயில் இவர் மீது மோதியிருக்கலாம் என்று ரெயில்வே போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்தாரா? இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? ரெயிலில் தற்கொலை செய்து ெகாண்டாரா? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முத்தண்ணன் குளத்தில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 55 வயது மதிக்கத்தக்க ஆண் யார்? எந்த ஊர் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை.
கோவை
கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோட்டில் உள்ள முத்தண்ணன் குளத்தில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் யார்? எந்த ஊர் என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை. மேலும் அவர் குளத்தில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த பாலி கிராமத்தில் சுப்பிரமணி என்பவரது விவசாய நிலத்தில் உள்ள தேக்கு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.
இதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர் செய்யாறு அடுத்த மோரணம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த சக்கரதாரி (வயது 60). என்பது தெரியவந்தது.
மேலும் அவர் அடித்து கொலை செய்யபட்டு தூக்கில் தொங்க விடபட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை கடல் மற்றும் லகூன் செல்லும் பாதையில் ஆற்றுக்கு நடுவே நடுத்திட்டு என்ற பகுதி ஒன்று உள்ளது. அங்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் சில நேரங்களில் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் கடலுக்கு செல்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று அந்த பகுதிக்கு ஒரு சில மீனவர்கள் நடுத்திட்டு சென்றபோது அங்கு துர்நாற்றம் வீசியதைகண்டு அருகில் சென்று பார்த்தனர். அங்கு தலை, கால் ஆகியவை வெளியில் தெரிந்து புதையுண்ட நிலையில் ரத்தக்கறையுடன் சடலம் ஒன்று புதைத்து இருந்ததை கண்டு அதர்ச்சி அடைந்தனர்.
மேலும் சற்று தூரத்தில் பூமியில் ரத்தக்கறைகளும் அதிகளவில் இருந்தது. இதனையடுத்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் உடல் புதையுண்டு இருந்ததையும், அதன் அருகே பூமியில் அதிகளவில் ரத்தக்கறைகளும் இருந்தது.
அதனால் இறந்து புதைக்கப்பட்ட உடல் கொலை செய்யப்பட்டு அங்கிருந்து இழுத்து சென்று புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது.
இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நடுத்திட்டு பகுதியில் ஜாம்பு வானோடை மேலக்காடு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சிவகுமார்(35) என்ற மீனவர் தனது மனைவி நேசமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வீட்டுக்கு செல்லாமல் சில ஆண்டுகளாக இந்த நடுத்திட்டு பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவரை 15 தினங்களுக்கு மேலாக காணவில்லை. அதனால் யாரேனும் அவரை கொலை செய்து புதைத்து சென்று விட்டார்களா? அல்லது இறந்து கிடப்பவர் வேறு நபரா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஜாம்புவானோடை வி.ஏ.ஓ. இளையராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதைந்து கிடக்கும் உடலை மீட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து அங்கேயே அடக்கம் செய்யவும் போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இன்று அதே இடத்தில் பிரேதப்பரிசோதனை நடைபெற உள்ளது.
இந்தநிலையில் ரத்தக்கறையுடன் புதையுண்ட நிலையில் சடலம் கிடக்கும் சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews