அடையாளம் தெரியாத ஆண் பிணம்

ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில், தொம்பக்குளம் விலக்கு பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது.கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் புகார் கொடுத்தார்.
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம்-ஆலங்குளம் ரோட்டில், தொம்பக்குளம் விலக்கு பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கீழராஜகுலராமன் வருவாய் ஆய்வாளர் மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த போது இறந்து கிடந்தவர் குறித்த விபரங்கள் ஏதும் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com