

கடலூர்:
குறிஞ்சிப்பாடி அருகே தம்பி பேட்டை பாளையம் கிராமம் புற்றுகோவில் ஒன்று உள்ளது. இந்த புற்றுகோயில் அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இந்நிலையில் இன்று காலை கரும்பு தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கு துர்நாற்றம் வீசுவதை அறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று பார்த்தனர்.அங்கு முகம் மற்றும் உடலின் பகுதிகள் சிதைந்து நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த இறந்து கிடந்த ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் இவரை யாரேனும் கொலை செய்து இங்கு போட்டுவிட்டு சென்றனரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.