search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • ராஜபாளையம் அருகே குறிச்சியார்பட்டியில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள குறிச்சியார்பட்டி தெற்கு தெருவில் உள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. சுவாமி சிலைகள் ஊர்வலமாக கேரளா செண்டை மேளதாளத்துடன் காளியம்மன் கோவில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறப்பட்டு தெற்கு தெரு காளியம்மன் கோவில் வந்தடைந்தது. சுவாமி சிலைகளுக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து யாகசாலை பூஜை ஆச்சாரி யர் வர்ணம் கணபதி பூஜை யுடன் தொடங்கியது. 2 நாள் யாகசாலை பூஜையை அடுத்து கிருஷ்ணன் கோவி லில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து மேளதாளத்துடன் வந்தனர்.

    ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பின் அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் தீப ஆராதனை வழிபாடு நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது

    சங்கரன்கோவில் சக்தி பிரியா தெம்மாங்கு குழு வினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை கேரளா ராஜ்மகாதேவன் நம்பூதிரி நடத்தி வைத்தார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை பொருளாளரும், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளரு மான குறிச்சியார்பட்டி மாரியப்பன் தலைமையில் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலையில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×