என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public meeting"

    • அரசியல்ல ஒருவரை அழிப்பதற்கு இப்படி குற்றச்சாட்டுகளா சொல்ல முடியும்.
    • உள்துறை அமைச்சகமும், முதலமைச்சரும் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கரூர் சம்பவத்தை தொடர்ந்து, தவெக முடங்கிவிட்டது. மாவட்ட செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர். தவெக நிர்வாகிகள் ஓடி விட்டனர். பதுங்கிவிட்டனர் என்றெல்லாம் பேச்சு.

    யார் ஓடியது. உங்கள் தந்தை முன்னாள் அமைச்சர் கருணாநிதி கைது செய்யும்போது யார் ஓடியது? சொந்த மகனே ஓடினார். திமுகவிற்கு வரலாறு தெரியுமா?

    வரலாற்று பற்றி பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள். தவெகவிற்கு வரலாறு தெரியாமல் இல்லை. எங்களுக்கு மக்கள் இயக்கமாக இருக்கவும் தெரியும், உங்களின் சூழ்ச்சிகளை உச்சநீதிமன்றத்தில் தூக்கி எறியவும் தெரியும்.

    என்ன செய்துவிட்டோம்.. மக்கள் இயக்கமாக இருந்து மக்கள் கட்சி உருவாக்கி, மக்களிடம் போய் பிரசாரம் செய்தாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நிர்வாக மாற்றங்களை உருவாக்க முடியும் என்று பேசினோம்.

    அரசியல்ல ஒருவரை அழிப்பதற்கு இப்படி குற்றச்சாட்டுகளா சொல்ல முடியும். மக்களின் ஒரே நம்பிக்கை தலைவர் விஜய்.

    கரூர் சம்பவத்தில் ஒட்டுமொத்த காவல்துறையும் செயலிழந்து இருக்கிறது. பொதுக்கூட்டத்தில் எவ்வளவு மக்கள் கூட்டம் வரும் என்று அரசுக்கு தெரியாது என்றால் உள்துறை அமைச்சகமும், முதலமைச்சரும் ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.

    கரூர் ஒரு மோசமான இடம் என்றும், அங்கு இருப்பவர் செந்தில் பாலாஜி ஒரு ரவுடி என்று தெரியாதா? என எங்களுக்கு அட்வைஸ் செய்கிறது திமுகவின் வாடகை வாய்கள். இன்னும் 6 மாதங்களில் தெரியும் யார் ரவுடி.. யார் அதிகாரம் பண்றது என்று தெரியும்.

    புது அரசியலை உருவாக்க வந்திருக்கிறோம். ஊழல் குடும்பத்தை அழிக்க வந்திருக்கிறோம்.

    கரூர் சம்பவத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியில் ஆக்டிங்கை பார்த்திருப்பீர்கள். மறுநாள் காளையில் துபாயில் இருந்து ஒருவர் வந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏதோ தமிழ்நாட்டிற்கு தியாகம் செய்வதற்காக துபாய்க்கு உண்ணாவிரதம் செய்ய போனதுமாதிரியும், அங்கிருந்து மக்களுக்காக ஓடி வந்தது போலவும்.. வந்து ஒரு மணி நேரம் கூட மருத்துவமனையில் அவர் இல்லை.

    நமக்க அதிகாரம் இருந்திருந்தால், பாதிக்கப்பட்ட மக்களுடன் கடைசி நிமிடம் வரை இருந்திருப்போம். ஒரு மணி நேரம் விசிட்டிற்கு பிறகு பேட்டியில், தவெக தலைவரை கேள்வி கேளுங்கள் என்கிறார்.

    உங்கள் பொதுச் செயலாளர்கள் தூங்கி எழுந்திருக்க முடியாமல் இருக்கிறார்கள். அதற்கு எங்கள் பொதுச் செயலாளர்கள் எவ்வளவோ மேல்.

    உங்கள் பொதுச் செயலாளரை (அமைச்சர் துரைமுருகன்) முதலில் எழுந்து ஒரு வாக்கிங் செய்ய சொல்லுங்கள். சட்டசபையில் உட்கார்ந்துக் கொண்டு கிண்டல், கேலி பண்ணிக் கொண்டு இருக்கிறார். அவை நாவடக்கம் இல்லை அவருக்கு.

    எப்போது பார்த்தாலும் சட்டசைபயில் ஐயா உதயநிதி வாழ்க.. உதயநிதி வாழ்க என்கிறார். உதயநிதி என்ன தியாகியா? இதுபோன்று கேள்வி கேட்டால் போதும் என் மீது ஒரு எப்ஐஆர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
    • இளைஞர் புரட்சி 2026-ம் ஆண்டு உருவாகி கொண்டிருக்கிறது ஆதவ் அர்ஜூனா.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதவ் அர்ஜூனா உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் 9 மணி நேரம் அழுதார். மக்கள் உணர்வை வைத்து அரசியல் செய்வது தமிழக வெற்றிக் கழகம் கிடையாது.

    கரூர் மக்கள் உயிரிழந்த அந்த 30 நாட்களும் கண்ணீர் சிந்தியது மட்டும் அல்லாமல் அவர்களை சந்தித்தபோது ஒரு புகைப்படத்தை கூட விஜய் வெளியிடவில்லை.

    தமிழகத்தின் ஒரே நம்பிக்கை என்பதால் தவெகவை நோக்கி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    கூட்டத்திற்கு நிர்வாகிகள் பத்தாயிரம் பேர் வருகிறார்கள் என்று சொல்ல முடியுமே தவிர மக்கள் எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று எங்களால் எப்படி கணிக்க முடியும்?

    இதெல்லாம் உளவுத்துறைக்கு தெரியாதா? இது தெரியவில்லை என்றால் உள்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்.

    சட்டமன்றத் தேர்தலில் கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக சொன்னாரே விஜய், உங்களுக்கு நன்றி இல்லையா?

    நாங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமென்றாலும் எடுப்போம் என்கிறார் துரைமுருகன். தைரியம் இருந்தால் என் தலைவர் விஜய் மீது கை வையுங்கள் பார்ப்போம். முதலில் அவர் வீட்டிற்கு செல்லுங்கள், ஒட்டுமொத்த கல்லூரி இளைஞர்களும் உங்கள் வீட்டிற்கு வருவார்கள்.

    இளைஞர் புரட்சி 2026ம் ஆண்டு உருவாகி கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்து ரையாடுகிறார்.
    • பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கல்வி, சமூக நீதி உள்ளிட்ட 10 உரிமைகளை வலியுறுத்தி 'உரிமை மீட்க, தலைமை காக்க' என்ற தலைப்பில் நடைபயணத்தை கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி தொடங்கினார். தொடர்ந்து அவர் பல்வேறு மாவட்டங்களில் தனது பிரசார நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நெல்லை மாவட்டத்தில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக நாளை காலையில் நெல்லைக்கு வரும் அன்பு மணி ராமதாஸ் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.

    பின்னர் வண்ணார்பேட்டையில் உள்ள ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அன்புமணி ராமதாஸ் மாலையில் பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அன்புமணி ராமதாஸ் வரும்போது அவரை வரவேற்கும் விதமாக அரசு அருங்காட்சியகம் அருகே உள்ள சவேரியர் ஆலயத்தில் இருந்து தெற்கு பஜாரில் லூர்து நாதன் சிலை வரையிலும் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு நெல்லை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை யில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் கரூர் சம்பவத்தின் எதிரொலியாக அன்புமணி ராமதாஸ் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதே நேரம் பொதுக்கூட்டத்தை பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

    • என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
    • நாளை மாலை 04.00 மணி அளவில் சேலம், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    சேலத்தில் நாளை மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைப்பெற உள்ளதாக த.வெ.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து, தமிழக வெற்றிக் கழகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலனை நோக்கிய தமிழக வெற்றிக் கழகப் பயணத்தின் அடுத்த கட்டமாக, மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர். வெற்றித் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், நம் கழகத்தின் குறிக்கோள்களையும் கொள்கைகளையும் தமிழக மக்களிடையே கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 5 கழக மண்டலங்கள், 120 கழக மாவட்டங்கள் மற்றும் 12,500 கிளைக் கழகங்கள் ஆகியவற்றில் கழகக் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று, கழகச் செயற்குழுக் கூட்டத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அத்தீர்மானத்தின்படி, மாநில அளவிலான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக் கூட்டம், நாளை (21.07.2025) திங்கள்கிழமை, மாலை 04.00 மணி அளவில் சேலம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது என்பதைக் நமது வெற்றித் நலைவர் அவர்களின் ஒப்புதலுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுச் சிறப்புரையாற்ற உள்ளனர்.

    இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணிகளின் அனைத்து நிலை நிர்வாகிகள், கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்துகொண்டு, கழகத்தின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நம் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல்.
    • தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணத்தை தொடங்க இருக்கிறேன்.

    மதுராந்தகத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.

    அப்போது அவர், செங்கல்பட்டு மாவட்ட பாமக பொதுக்குழுவில் கட்சி நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை வழங்கினார்.

    பொதுக்குழு கூட்டத்தில் அவர் கூறியதாவது:-

    மாமல்லபுரத்தில் கடந்த மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டின் திருஷ்டிதான் தற்போது நிகழ்ந்த பிரச்சனைகளுக்கு காரணம்.

    நம் மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் பார்த்து ஆளுங்கட்சிக்கு வயித்தெறிச்சல். அந்த வயித்தெறிச்சலில் வந்த திருஷ்டிதான் கட்சியில் தற்போது நடக்கும் சம்பவங்கள். ஆனாலும் திருஷ்டி எல்லாம் போய்விட்டது.

    விரைவில் திருப்போரூர் முருகனை வணங்கி தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணத்தை தொடங்க இருக்கிறேன்.

    2026 தேர்தலில் நிச்சயமாக பாமக அங்கமாக இருக்கும் ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கும். கூட்டணி ஆட்சியில் அங்கமாக இருப்போம்.

    சமூக வலைதளங்களில் நம்மை நாமே எதிர்த்து பதிவுகளை போட வேண்டாம். நம் எதிரி திமுக தான்.

    பாமகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் வேற லெவலில் இருக்கும். தம்பிகளா நீங்க ரெடியா?

    பாமகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் எதிர்க்க வேண்டியது திமுகவைதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
    • அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று விமானம் மூலம் மதுரை சென்றார். அவர் இன்றும், நாளையும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    பொதுக்குழுவிற்காக மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

    முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், மதுரையில் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வழங்கப்படவுள்ள மதிய விருந்து பட்டியல் வெளியாகியுள்ளது.

    அதன்படி, பொதுக்குழுவில் பங்கேற்கும் திமுக உறுப்பினர்களுக்கு சைவ, அசைவ உணவுகள் மதிய விருந்துக்கு வழங்கப்படுகிறது. 

    • பொதுக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, கே.வி. மஹாலில் நடைபெற உள்ளது.
    • பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தேமுதிகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது குறுித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 30.04.2025 புதன்கிழமை காலை 09.00 மணியளவில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, கே.வி. மஹாலில் நடைபெற உள்ளது.

    அதில் தேமுதிக பொதுச் செயலாளர் .பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொண்டு கழகத்தின் ஆக்கப் பணிகள் குறித்தும், கழக வளர்ச்சி மற்றும் எதிர்கால அரசியலில் முக்கிய முடிவுகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசித்து சிறப்புரை ஆற்றவுள்ளார்.

    இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், கழக அணி செயலாளர்கள், கழக அணி துணை செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக அவைத்தலைவர், மாவட்ட கழக பொருளாளர், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், பேரூராட்சி கழக செயலாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் (ஒரு நபர் மட்டும்), மற்றும் புதுச்சேரி, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டில்லி, அந்தமான் ஆகிய மாநில கழக செயலாளர்களும் இப்பொதுக்குழு கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.
    • கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

    அதன்படி, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கழக விதிகளின்படி, கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

    கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது.

    பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • எட்டயபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இனி மின்கட்டணம் செலுத்த போகும் போதும் ஷாக் அடிக்கும்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 51-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நலத்திட்ட உதவிகள்

    நகர செயலாளர் ராஜகுமார் தலைமை தாங்கினார். இதில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது :-

    சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி. ராஜேந்திரன் என பலர் கட்சி ஆரம்பித்தும் காணவில்லை. விஜயகாந்த் ஆரம்பித்த தே.மு.தி.க. தேய்ந்து விட்டது. ஆனால் என்றைக்கும் நம்பர் 1 கட்சியாக நிலைத்து நிற்கும் கட்சி அ.தி.மு.க. தான்.

    நம்பர் 1 கட்சி

    அ.தி.மு.க இன்றைக்கு எதிர்கட்சியாக இருக்கலாம். ஆனால் மக்கள் உள்ளங்களில் ஆளும் கட்சி. அ.தி.மு.க.விற்கும் 3 எழுத்துக்கும் ஒரு ராசி உண்டு. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு 3 எழுத்து, இப்போது இ.பி.எஸ்.க்கும் 3 எழுத்து. இன்னொரு வருக்கும் 3 எழுத்து தான் ஓ.பி.எஸ். ஆனால் அவருக்கு முதல் எழுத்து பூஜ்யம் என்பதால் அவர் கணக்கில் வரமாட்டார்.

    அ.தி.மு.க.வில் இன்றைக்குள்ள நிலை போன்று 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி வரும். ஆனால் எழுச்சியுடன் வெற்றி பெறும். கட்சி கொடி, சின்னம் எங்களிடம் உள்ளது. நவம்பர் மாதத்தில் அ.தி.மு.க.வில் தெளிவு ஏற்பட்டு 3-வது அத்தியாயமாக எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக வருவார்.

    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும். இனி மின்கட்டணம் செலுத்த போகும் போதும் ஷாக் அடிக்கும். தி.மு.க. ஆட்சியில் ஒரு நல்லதிட்டம் கூட வரவில்லை. நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 40-க்கு 40 அளித்தால் தி.மு.க ஆட்சி வீட்டுக்கு போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது.
    • ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி அன்று மாலை 6மணியளவில் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்டதி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருப்பூர் வாலிபாளையம் யூனியன் மில் சாலை ஸ்ரீ சக்தி திரையரங்கம் முன்பு வருகிற 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6மணியளவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., மற்றும் தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் ஜின்னா சிறப்புரையாற்றுகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை 3-ந்தேதி இந்தி திணிப்பை ஏன் எதிர்க்க வேண்டும் என்கின்ற தலைப்பில் தலைமை கழகத்தால் அனுப்பப்பட்ட துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்படவுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வீடு வீடாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கவுள்ளார். இதில் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச., நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் அனைவரும் கலந்துகொண்டு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமெனவும், நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டை மீறி அமைச்சர்கள் செயல்படுகின்றனர் என செந்தில்நாதன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டியுள்ளார்.
    • சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கையில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தலைமையில் அரண்மனை வாசல் முன்பு சண்முகராஜா கலையரங்கத்தில் நடந்தது.

    கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டின் காவல் துறை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களும் அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அவர் தன்னை மீறி பேசுகின்ற எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறார்.

    அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் எம்.எல்.ஏ.க்களை பிரித்து சென்று விடுகிறார்கள் என்று அச்சப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, பாஸ்கரன் மற்றும் நடிகர் சிங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், குணசேகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், மாநில நிர்வாகிகள் கருணாகரன், தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் தசரதன், செல்லமணி, ஸ்டீபன், சேவியர், சிவாஜி, கோபி, பாரதிராஜன், ஜெகதீஸ்வரன், பழனிசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவதேவ்குமார், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணைச் செயலாளர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பாண்டி நன்றி கூறினார்.

    • பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    தென்காசி:

    ஜம்புநதி-ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்த உண்மை நிலை விளக்க பொதுக்கூட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனிதுரை தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் பொழுது ஜம்பு நதி, ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டப் பணிகள் அவசரமாக தொடங்கப்பட்டு முறையான வனத்துறை அனுமதி உள்ளிட்டவை பெறாமல் பெயரளவிற்கு தொடங்கப்பட்டது. அதனை தற்பொழுது தி.மு.க.ஆட்சியில் முழுமையாக கொண்டு வருவதற்கும், இரட்டைக் குளம் கால்வாய் திட்டப் பணியையும் உரிய முறையில் மேற்கொண்டு விவசாயிகள் பயனடையும் வகையில் அனைத்து பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சரத் பாலா, ராமநதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் இணைப்பு குழு அமைப்பாளர் ராம உதயசூரியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஜேசுராஜன், முத்துப்பாண்டி, ஆறுமுகசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சிவன் பாண்டியன், அழகு சுந்தரம், ரவிசங்கர், திவான் ஒலி மற்றும் பேரூராட்சி தலைவர்கள் பி.எம்.எஸ்.ராஜன், சுந்தர்ராஜன், சின்னத்தாய், வேணி, சுதா மோகன்லால், தொழிலதிபர்ஆர்.கே.காளிதாசன், சிவ அருணன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×